By 25 December 2016 0 Comments

நினைவுத்திறனை அதிகரிக்க இந்த பானங்களை மட்டும் குடிங்க…!!

625-500-560-350-160-300-053-800-748-160-70-4நமது மூளையின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்க, தினமும் நாம் சாப்பிடும் உணவில் கனிமச்சத்துக்கள் மற்றும் விட்டமின்கள் போதுமான அளவில் இருக்க வேண்டும்.

தினமும் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு வந்தாலே, அனைத்து உறுப்புகளும் புத்துணர்ச்சியுடன், சுறுசுறுப்பாக செயல்படும்.

வாழைப்பழம் ஜூஸ்

1 கப் பால், 3 வாழைப்பழம், 1 ஸ்பூன் புரோட்டீன் பவுடர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய் ஆகிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைத்து ஜூஸ் செய்து, தினமும் குடித்து வந்தால், ஞாபக மறதி தடுக்கப்பட்டு, நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது.

பெர்ரி ஜூஸ்

ஒரு கப் பெர்ரி பழங்கள், 4 துண்டுகள் அன்னாசிப் பழம், 2 டேபிள் ஸ்பூன் சியா விதைகள் மற்றும் 1 ஸ்பூன் புரோட்டீன் பவுடர் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து, ஜூஸ் செய்து குடிக்க வேண்டும். இதனால் மூளையினுள் உட்காயங்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

மாதுளம் பழம் ஜூஸ்

1 கப் மாதுளை ஜூஸ், 1/2 கப் ஸ்ட்ராபெர்ரி, 2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 கப் தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து, அந்த ஜூஸை தினமும் குடித்து வர வேண்டும்.. இந்த ஜூஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நமது மூளையின் சக்தியை மேம்படுத்தி, நினைவு திறனை அதிகரிக்கச் செய்கிறது.

பசலைக் கீரை ஜூஸ்

1 கப் பசலைக் கீரை, 1 கப் மாம்பழம், 1 அவகேடோ பழம் மற்றும் 2 டீஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து, அதைக் குடித்து வந்தால், அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோயைத் தடுக்கப்படுகிறது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… http://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D



Post a Comment

Protected by WP Anti Spam