By 28 December 2016 0 Comments

ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? உலுக்கிபோடும் உண்மைகள்! உறைய வைக்கும் தகவல்கள்!! (பகுதி-1)

timthumb30ம் திகதி ஏப்ரல் மாதம் 2000 ஆண்டு..

புதுக்குடியிருப்பு பகுதியில் அமைத்திருந்த புலிகளின் இரகசிய முகாம் ஒன்றில் நிலத்தில் விரித்து வைக்கப்பட்டிருந்த பாரிய இலங்கையின் வரை படத்தில் தமிழீழப் பகுதிகள் சிகப்பு வர்ணத்தால் துல்லியமாக எல்லைக்கோடு பிரிக்கப் பட்டிருந்தது.
வரைபடத்தின் சிங்களப் பகுதிகள் மீது வரிப்புலிச் சீருடையில் கைகளை கட்டியபடி கம்பீரமாக புன்னகைத்தபடி பிரபாகரன் நின்றிருக்க அவர் அருகே அதே சீருடையில் பொட்டம்மான்.

தனித் தனியாகவும் ஒரே நேரத்திலும் பல அலைவரிசைகளில் பேசக் கூடிய அங்கிருந்த அதி சக்தி வாய்ந்த வோக்கி டாக்கியில் சங்கேத மொழியில் இடை விடாது தொடர்ந்து வரும் செய்திகளை தொகுத்து அதனை இயக்குபவர் சொல்லிக்கொண்டிருக்க…

பிரபாகரனின் மெய்ப்பாது காவலர் ஒருவர் உடனுக்குடன் அவரது காலடியில் கிடக்கும் வரை படத்தில்புலிகள் முன்னேறும் இடங்களை அம்புக்குறிகள் இட்டபடி விளக்கிக்கொண்டிருந்தார்.

மார்ச் மாதம் 26 ந் திகதி ஈழத்தின் குடாரப்பு பகுதியில் கடற்புலிகளால் தரையிறக்கப் பட்ட 1200 போராளிகளோடு பால்ராஜ் தலைமையில் தொடங்கப் பட்டதுதான் புலிகளின் ஓயாத அலைகள் 3 தாக்குதல் நடவடிக்கை.

உள்ளே சுமார் பத்தாயிரம் ஸ்ரீலங்கா இராணுவத்தையும், வெளியே தொடர்ச்சியாக 55 ஆயிரம் ஸ்ரீலங்கா இராணுவத்தையும் கொண்டிருந்த ஆனையிறவுபடைத்தளம் 35 நாட்கள் தொடர்ச்சியான
தாக்குதலாலும் முற்றுகைக்குள் இருந்த இராணுவத்தினருக்கு உதவிக்கு வந்த படைகளின் மீது நடத்திய ஊடறுப்பு தாக்குதலாலும் ஆனையிறவு படைத்தளம் புலிகளால் கைப்பற்றப் பட்ட பின்னர்,

உற்சாகத்தோடு நிலப்பரப்புகளை தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தபடி நான்கு பக்கமும் தமிழீழத்தின் எல்லைகளை நோக்கி தொடர்ந்து முன்னேறும் செய்திகள் தான் இப்போது வந்து கொண்டிருக்கின்றது .

இடையே கொசுறுத் தகவலாக சிறிலங்காவின் 53ஆம் படையணியின் தளபதியாக விளங்கிய காமினி ஹெட்டியாராச்சி பதவியிலிருந்து விலக்கப்பட்ட செய்தியும் வந்து சேர்க்கிறது.

பால்ராஜ்சின் அதிரடி திட்டங்களும், கருணாவின் துல்லியமான ஊடறுப்பு தாக்குதல்களையும் எதிர் கொள்ள முடியாமல் சிங்களப் படைகள் ஆயுதங்களை எறிந்துவிட்டு ஓட்டம் பிடிக்கத் தொடங்குகிறார்கள்.

பலர் தங்கள் இராணுவ சீருடைகளை கழற்றி எறிந்து விட்டு மக்களின் வீடுகளுக்குள் புகுந்து கையில் கிடைத்ததை அணிந்து கொண்டும் சிலர் யட்டியோடு ஓடிய சம்பவங்களும் நடந்தது.

புலிகளின் படையணிகள் நான்குபுறமும் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தனர்.

இவர்களின் வெற்றிகளை ஒரு கிரிக்கெட் கமேன்றியைப்போல செய்திகளில் கேட்டுக் கொண்டிருந்த வெளிநாட்டுத் தமிழர்கள் கைதட்டி விசிலடித்தும் கேக் வெட்டி பட்டாசு கொளுத்தியும் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

புலிகளின் நிலப்பரப்பு விரிந்துகொண்டிருந்தது.

புலிகள் யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றி விடலாம் என்கிற பயம் இலங்கை அரசுக்கு வந்திருந்தது.

அதனால் யாழ்ப்பாணத்தில் இருந்த பலாலிப் படைத்தளத்தில் இருந்த கன ரக ஆயுதங்கள் பீரங்கிகள் அனைத்தையும் கழற்றி கரை நகர் படைத்தளத்துக்கு மாற்றியிருந்தனர் .

அப்படி புலிகள் யாழ்பானத்தை கைப்பற்றினால் அங்கிருந்த 50 ஆயிரம் படையினரையும் இந்தியா பத்திரமாக மீட்டெடுத்து கேரளா பகுதிக்கு கொண்டு செல்வதென பேச்சு வார்த்தைகளும் இலங்கை இந்திய அரசுகளிடையே நடந்து கொண்டிருந்தது..

வரை படத்தில் அம்புக்குறிகளால் புலிகள் முன்னேறிக் கொண்டிருக்கும் இடங்களை கவனித்த பிரபாகரன்.

கிழக்கே ஒரு இடத்தில் தமிழீழ எல்லைக்கோட்டையும் தாண்டி அந்த அம்புக்குறிகள் நீண்டுகொண்டே போய்க்கொண்டிருந்தது.

அந்தப்பகுதியில் கேணல் சங்கரின் தலைமையிலான சிறிய படையணி ஒன்று பதவியா பகுதியில் தமிழர் பிரதேசங்களையும் தாண்டி சிங்களப் பகுதிக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள்.

அந்தப்பகுதி ஸ்ரீலங்கா படையினர் காவல்துறையினர் மட்டுமல்லாது பொது மக்களும் இடங்களை விட்டு ஓடத் தொடங்கியிருந்தனர்.

சங்கரின் அணியில் உண்மையில் 50 க்கும் குறைவானவர்களே இருந்தனர்.

ஆனாலும் புலிகளின் பெரும் படையணி ஒன்று வருவதாக நினைத்தே அனைவரும் ஓடிக் கொண்டிருந்தனர்.

அதை கவனித்த பிரபாகரன் அவசரமாக வாக்கி டோக்கியை எடுத்து தனது தளபதிகள் அனைவரையும் ஒரே அலை வரிசைக்கு வரச்சொன்னவர் உடனடியாக முன்னேறுவதை நிறுத்தி கைப்பற்றிய இடங்களில் பாதுகாப்பை பலப் படுத்திவிட்டு அனை வரையும் தன்னிடம் வருமாறு கட்டையிட்டர் .

எதற்கு முன்னேற்றத்தை நிறுத்தச் சொன்னார் என்று அருகில் நின்றிருந்த பொட்டம்மானுக்கு மட்டுமல்ல களத்தில் உற்சாகமா முன்னேறிக் கொண்டிருந்த தளபதிகளுக்கும் புரியவில்லை.

ஆனால் கட்டளைக்கேட்ப அனைவரும் அவசரமாக வன்னிக்கு பிரபாகரனின் இருப்பிடத்திற்கு திரும்பினார்கள் .அப்போதுதான் யுத்த களத்தில் ஒரு மாற்றம் வந்தது.

கூடியிருந்த தளபதிகளிடம் முன்னேற்றத்தை உடனடியாக நிறுத்தச் சொன்ன காரணத்தை விளக்கினார்.

இரண்டு மாதங்களாக தொடர்ச்சியாக நடந்த யுத்தத்தில் பெருமளவான போராளிகளை இழந்தும் காயமடைந்து சண்டையில் இருந்து அகற்றப்பட்டும் விட்ட நிலையில் .

நாங்கள் பெருமளவு நிலத்தை பிடித்துவிட்டோம் அதனை பாதுகாக்க போதுமான ஆட்பலம் எம்மிடம் இல்லை.

ஓடிக்கொண்டிருக்கும் எதிரிக்கு எமது பலவீனம் தெரிந்துவிட்டால் நாங்கள் பிடித்த இடங்களை மீண்டும் இழக்க வேண்டி வரும் எனவே உடனடியாக எமது ஆட்பலத்தை கூட்ட வேண்டும் அடுத்தது முக்கியமான குறித்த இலக்கை மட்டும் நோக்கி முன்னேற வேண்டும்.

இதுதான் அடுத்த திட்டம்.

எனவே அவசரமாக புதிய ஆட்களை சேர்க்க வேண்டியது ஒவ்வொரு மாவட்ட தளபதிகளின் பொறுப்பு என்றுவிட்டு அனைவரையும் பார்த்தார்.

தமிழ் செல்வன் வழமைபோல சிரித்தார்.

மற்றவர்கள் ஒருவரையொருவர் பார்க்க கருணா மட்டும் குனிந்து நிலத்தில் விரிக்கப்பட்டிருந்த வரைபடத்தை பார்த்துக்கொண்டிருந்தான் .(அதற்கான காரணத்தை பின்னர் சொல்கிறேன் ..)

அடுத்ததாக எமது முக்கிய இலக்காக எதை நோக்கி நகரவேண்டும் என்கிற பிரபாகரனின் கேள்விக்கு அப்பொழுது சாள்ஸ் அன்ரனி சிறப்பு படைப் பிரிவுத் தளபதி பால்ராச் ஒரு யோசனையை முன்வைத்தார்.

யாழ் குடா நாட்டு காவலரண்களை பலப் படுத்தி விட்டு அனைத்து வளங்களையும் பாவித்து கிழக்கு பக்கமாக முன்னேறியிருக்கும் படையணியுடன் இணைந்து திருகோணமலை மாவட்டத்தை நோக்கி ஓயாத அலை நான்கு திட்டத்தை தொடக்கி முன்றேலாம் ஓடிக்கொண்டிருக்கும் படையினர் தொர்ந்து ஓடிக்கொண்டேயிருப்பார்கள்.

திருமலையில் அமைந்திருக்கும் கடற்படைத்தளம்தான் பலமானது அதனை கடல்வழியாக கடற்புலிகளும் தாக்கத் தொடங்கும் போது தரைவழியாக முன்னேறும் புலிகளும் தாக்கினால் அவர்களும் நிலை குலைந்து விடுவார்கள்..

திருகோணமலையை கட்டுப் பாட்டில் கொண்டுவந்தால் ஏற்கனவே கட்டுப் பாட்டில் இருக்கும் மட்டு அம்பாறை மாவட்டத்தில் இருந்தும் ராம் தலைமையில் ஒரு படையணி தாக்குதலை நடத்தியபடி முன்னேறி வரும்…

இரண்டு புலிகளின் அணியினரும் திருகோண மலையில் சந்தித்து வட தென் தமிழீழத்திற்கான நேரடி தரைவளித் தொர்பை ஏற்படுத்தி விடுவதோடு இதன் மூலம் தமிழீழத்தின் 70 வீதம் தரை மற்றும் கடற் பகுதி எமது கைளிற்கு வந்துவிடும்.

அதற்கு பின்னர் யாழ் குடாவில் உள்ள படையினரிற்கான ஆயுத உணவு வழங்கல்கள் கடல் மூலம் நடாத்துவது இலங்கையரசிற்கு சிரமானது.

எனவே ஆகாய மார்க்கமாக நடக்கும் வழங்கலை சீர் குலைத்தாலே இலகுவாக யாழும் விழுந்துவிடும் என்று தனது திட்டத்தை வைத்தார்.

இவரது இந்தத் திட்டத்திற்கு சொர்ணம் ஆவலோடு தனது ஆதரவை தெரிவித்திருந்தார்.

காரணம் அவரது சொந்த மாவட்டமான திருகோணமலையை கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவருவது அவரது நீண்டநாள் கனவாக இருந்தது.

அதே நேரம் பால்ராச்சின் யோசனைக்கு கருணா, பானு, பதுமன், சொர்ணம், ஜெயம்.என முக்கிய தளபதிகளோடு பொரும்பாலானவர்கள் ஆதரித்தார்கள்.

ஆனால் குறுக்கிட்ட தமிழ்ச்செல்வன் கிழக்கை முழுவதுமாக கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்தால் மக்களற்ற பெருமளவான காடுகளும் வயல்களும் கொண்ட வெறும் நிலம் மட்டுமே கட்டுப் பாட்டில் வரும்.

அதே நேரம் கிழக்கு மாகணத்தை முழுவதுமாக கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்தாலும் அங்குள்ள மக்களின் நிதி நிலைமை யாழ்ப்பாணத்தோடு ஒப்பிடும் படியானதாக இல்லை.

கிழக்கை சேர்ந்தவர்களும் வெளிநாடுகளில் அதிகம் இல்லை எனவே இயக்கத்திற்கான நிதிவளத்தை பெருமளவாக அவர்களிடமிருந்து பெற முடியாது.

யாழ்ப்பாணத்தை புலிகள் இழந்தபின்னர் சோர்வடைந்திருந்த புலம்பெயர் யாழ்ப்பாண சமூகம் மாங்குளம் ஆனையிறவு வெற்றியின் பின்னர்தான் பெருமளவான நிதி உதவியினை செய்திருக்கிறார்கள்.

எனவே யாழ்ப்பாணத்தை பிடிப்பதன் மூலமே பெருமளவு நிதியினை யாழிலும் வெளிநாட்டிலும் பெறமுடியும்.

அதுவே இயக்கதின் வளர்ச்சிக்கு உதவும் என தமிழ்ச்செல்வன் இலாப நட்ட கணக்கு போட்டு காண்பித்தார்.

இதற்கு புலிகளின் நிதிப் பொறுப்பாளர் தமிழேந்தி (றஞ்சித்), அனைத்துலக பொறுப்பாளர் கஸ்ரோ, தளபதி தீபன், தளபதி துர்க்கா ஆகியோர் ஆதரவு தெரிவிக்க மற்றைய தளபதிகள் தலைவர் எது சொன்னாலும் சரி என்கிற நிலையை எடுத்திருந்தனர்.

யாழை நோக்கி படையெடுத்தால் முன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் புலிகளாலும் சூழப்பட்டிருக்கும் படையினரிற்கு ஓடுவதற்கு இடமில்லை.

அவர்களிற்கு புலிகளை எதிர்த்து போரிட்டு வெல்லவேண்டும் என்பதற்குமப்பால் வாழ்வா சாவா என்கிற போராகிவிடும்.

எனவே முடிந்தவரை சண்டையிடவே விரும்புவார்கள் என்கிற வாதத்தை பால்ராச் அணியினர் வைத்தார்கள்.

ஆனையிறவு தாக்குதல்களின் போது யாழ்ப்பாணத்திற்கும் படையினர் தப்பிச் சென்றிருந்தனர்.

எனவே அவர்களும் புலிகளின் பலத்தைப் பற்றி மற்றைய படையினர்களிற்கு சொல்லியிருப்பார்கள்.

எனவே யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவத்தினரும் உள ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பர்கள்.

நாங்கள் முன்னேறியபடியே இராணுவத்தை சரணடையச் சொல்லி அறிவித்தல்களை கொடுப்போம்.

ஒரு கட்டத்தில் இராணுவத்தினர் சரணடைய முடிவெடுத்ததும் அவர்கள் ஆயுதங்களை போட்டு விட்டு புலிகளின் கடும் பாதுகாப்புடன் ஏ 9 பாதை வழியாக வவுனியாவரை போய் சேருவதற்கு வழிவகை செய்யலாம் என்பது தமிழ்ச்செல்வன் தரப்பு வாதமாக இருந்தது.

இறுதியில் வழைமை போல தமிழ்ச் செல்வன் சொன்னதே பிரபாகரனிடம் எடுபட்டது. இதனால் கிழக்கு மாகாணத் தளபதிகளும் போரளிகளும் மனச்சோர்வடைந்திருந்தனர்.

தொடரும்…Post a Comment

Protected by WP Anti Spam