கணவரை கொலை செய்த மனைவிக்கு மன்னிப்பு வழங்கிய பிரான்ஸ் பிரதமர்…!! வீடியோ

Read Time:2 Minute, 40 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70பிரான்ஸ் நாட்டில் தனது மகள்களை பலாத்காரம் செய்த கணவரை கொலை செய்த மனைவிக்கு சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாரிஸில் வசித்து வந்த Sauvage (69) என்ற பெண்மணிக்கு 3 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

இவரின் கணவர் Marot மிகவும் கொடுமைகாரர் ஆவார். குடித்துவிட்டு தனது மனைவியை உடல் ரீதியாக துன்புறுத்தியதோடு மட்டுமல்லாமல் தனது 3 மகள்களையும் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும், இவரது மகன் தற்கொலை செய்து கொள்வதற்கு இவரே காரணமாக அமைந்துள்ளது. கணவரின் கொடுமையான செயல்களை பார்த்தும் பொறுமை காத்து வந்த Sauvage, ஒரு கட்டத்தில் தனது கணவரின் செயல் வரம்புமீறவே கடந்த 2012 ஆம் ஆண்டு குடித்துவிட்டு தன்னை தாக்க வந்த கணவரிடம் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக துப்பாக்கியால் தனது கணவரை சுட்டுக்கொலை செய்துள்ளார்.

இந்த கொலைக்குற்றம் தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையில், Sauvage- க்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும் Sauvage செய்ததில் எந்த தவறும் இல்லை. ஒரு கொடுமைகார நபரிடம் இருந்து காத்துக்கொள்வதற்காகவே இவ்வாறு செய்துள்ளார். மேலும் பெற்ற மகள்களை பலாத்காரம் செய்த தந்தை நிச்சயம் தண்டிக்கப்படவேண்டியவர் என பலரும் இவருக்கு ஆதரவாக குரல் எழுப்புனர்.

அரசியல் தலைவர்கள், பெண்ணியவாதிகள் என சுமார் 436,000 பேர் கையெழுத்திட்டு பெட்டிசனையும் பிரதமருக்கு அனுப்பியுள்ளனர். மேலும், Sauvage- ம் பிரான்ஸ் பிரதமர் ஹேலோன்டேவுக்கு கருணை மனு ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், 1958 ஆம் ஆண்டு அரசியல் சாசனத்தில் பொறிக்கப்பட்ட மன்னிப்பு வழங்குதல் சட்டத்தின் அடிப்படையில், பிரான்ஸ் பிரதமர் Sauvage- க்கு மன்னிப்பு வழங்கி சிறையில் இருந்து விடுவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐந்தே நாட்களில் சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் அற்புத பானம் குறித்து தெரியுமா?
Next post நான் விஜய் ரசிகர்னு சொன்னா அண்ணாவுக்கு பிடிக்காது – ஏன்? – மனம் திறக்கும் சாந்தனு…!!