பெண் போலீஸ் மீது ஆசிட் வீச்சு: ரியல் எஸ்டேட் அதிபர் கைது..!!

Read Time:4 Minute, 50 Second

arrest-5வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் டவுன் என்.ஜி.ஓ. நகரை சேர்ந்தவர் லாரி டிரைவர் சுரேஷ் (30). இவரது மனைவி லாவண்யா (25). ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்த லாவண்யா சமீபத்தில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டார்.

டிசம்பர் 23-ந் தேதி இரவு பணி முடிந்து வீடு திரும்பும் போது 2 பேர் கும்பல் லாவண்யா மீது ஆசிட் வீசிவிட்டு தப்பினர். இதில் லாவண்யாவின் முகம், கழுத்து, முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அப்பகுதி மக்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆசிட் வீசிய கும்பலை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

பெண் போலீஸ் லாவண்யா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பத்தூர் என்.ஜி.ஓ. நகரில் ரியல் எஸ்டேட் அதிபர் பிரபு (எ) பிரபாகரன் என்பவரிடம் ரூ.28 லட்சத்துக்கு புதிதாக வீடு வாங்கினார். இதில், பணத்தை முழுமையாக லாவண்யா வழங்கவில்லை.

பிரபாகரனிடம் தவணை முறையில் பணத்தை செலுத்தி வந்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு பிரபாகரனுக்கு பணத்தை லாவண்யா திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது.

நாட்கள் கடந்த பிறகு ஏற்பட்ட இடைவெளியால் ரியல் எஸ்டேட் அதிபர் பிரபாகரனுக்கும், லாவண்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர், ஆட்களை ஏவி லாவண்யா மீது ஆசிட் வீசினாரா? என்ற கோணத்தில் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதுதவிர, லாவண்யா 3 செல்போன்கள் 6 சிம்கார்டுகள் பயன்படுத்தி வந்துள்ளார். அதில், அவருக்கு பலரிடம் இருந்து அதிக அழைப்புகள் வந்துள்ளன. இதனால் லாவண்யாவுக்கும், அவரது கணவருக்கும் இடையேயும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

எனவே, லாவண்யாவை பழி தீர்க்க கணவர் சுரேஷ் அல்லது ரியல் எஸ்டேட் அதிபர் பிரபாகரன் ஆகிய 2 பேரில் யாரோ ஒருவர் தான் ஆசிட் வீசியிருப்பார்கள் என்ற முடிவுக்கு வந்த தனிப்படை போலீசார் அவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

தீவிர விசாரணையில் ரியல் எஸ்டேட் பிரபாகரனுக்கு ஆசிட் வீச்சு சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே லாவண்யாவின் 6 சிம்கார்டுகளில் பதிவான செல்போன் அழைப்புகள், பேச்சுகள் ஆய்வு செய்யப்பட்டது.

ஆசிட் வீச்சு சம்பவத்தில் சென்னையை சேர்ந்த ஏட்டு ஒருவர் உள்பட மேலும் சிலர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 4 முக்கிய தடயங்களும் கிடைத்ததாக கடந்த 27-ந் தேதி எஸ்.பி. பகவலன் அளித்த பேட்டியில் கூறி இருந்தார்.பல்வேறு கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையில் ஆசிட் வீச்சில், ரியல் எஸ்டேட் அதிபர் பிரபாகரன் மீதே சந்தேக பார்வை பலமாக விழுந்தது. எனவே, அவர் தான் குற்றவாளி என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர். தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஆசிட் வீச்சில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரியல் எஸ்டேட் அதிபர் பிரபு (எ) பிரபாகரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஆசிட் வீசுவதற்கு ஏவப்பட்ட 2 பேரும் சிக்கியதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தோனேசியப் பணிப்பெண்களை விபசாரத்தில் தள்ளிய 3 பேருக்கு ஐந்தாண்டு சிறை..!!
Next post எதற்கு எது சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும் தெரிந்து கொள்வோம்…??