அமெரிக்காவில் துப்பாக்கியை காட்டி மிரட்டி மனைவியை அடித்து உதைத்த எம்.பி..!!

Read Time:1 Minute, 39 Second

201701021003526682_us-lawmaker-arrested-after-911-call-records-him-beating-wife_secvpfதுப்பாக்கியை காட்டி மிரட்டி மனைவியை அடித்து உதைத்ததாக அமெரிக்க எம்.பி கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் ஐகன் நகரை சேர்ந்தவர் கிறிஸ் கார்லே (36). இவர் குடியரசு கட்சியை சேர்ந்த எம்.பி ஆக இருக்கிறார்.

இவருக்கும், மனைவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கிறிஸ் தனது மனைவியை அடித்து உதைத்தார். முகத்தில் குத்தி காயம் ஏற்படுத்தினார்.

மேலும் துப்பாக்கியை காட்டி உன்னை சுட்டுக் கொன்று விடுவேன் என மிரட்டினார். உடனே அவரது மனைவி ஐகன் நகர் அவசர போலீஸ் எண் 911-க்கு டெலிபோன் செய்தார்.

இதற்கிடையே, துப்பாக்கியை காட்டி மிரட்டிக் கொண்டிருந்த கிறிஸ்சை அவரது 8 வயது குழந்தை அழுது கொண்டே தடுத்தது. அவசர கால டெலிபோனில் ‘ரெக்கார்டு’ ஆனது. அவரது மனைவியும் அழுது கொண்டே என்னை கொன்று விடாதீர்கள் என கெஞ்சியதும் பதிவானது.

அதை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீசார் கிறிஸ் கார்லே எம்.பியை கைது செய்தனர். அவசர கால டெலிபோனில் பதிவான குரலை ஆதாரமாக காட்டினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடல் சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா? – இதோ எளிய வழி..!!
Next post பெண் போலீஸ் மீது ஆசிட் வீச்சு: வேலூர் போலீஸ்காரர் சிக்குகிறார்..!!