இந்த வேலை செய்யும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை வரும் வாய்ப்புள்ளது எனத் தெரியுமா?..!!

Read Time:3 Minute, 45 Second

infertilityமலட்டுத்தன்மை என்பது தற்போதைய தம்பதியினர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாகும். இந்த மலட்டுத்தன்மை பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் ஏற்படும். இதுவரை நாம் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு இறுக்கமான உள்ளாடையை அணிவது, லேப்டாப்பை மடியில் வைத்து வேலை செய்வது என்று தான் படித்திருப்போம்.

ஆனால் ஒரு ஆணின் மலட்டுத்தன்மை அந்த ஆண் செய்யும் வேலை அல்லது தொழிலும் காரணம் என்பது தெரியுமா? இங்கு எந்த வேலை/தொழில் செய்யும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கொடுக்கப்பட்டுள்ளது.

கார், லாரி, பஸ் ஓட்டுனர்கள்
ஆம், கார், பஸ், லாரி போன்றவற்றை ஓட்டும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்புள்ளது. இதற்கு காரணம், இந்த வாகனங்களை ஓட்டுவதற்கு அமரும் இடத்தில் வெப்பம் அதிகம் இருப்பதால், அது விந்தணுக்களின் உற்பத்தியைப் பாதித்து, ஆணின் கருவளத்தைப் பாதிக்கும். அதுவும் பல வருடங்களாக இந்த வேலை செய்யும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாம்.

நீர்மூழ்கிக் கப்பல் வீரர்
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் வேலை செய்யும் வீரர்கள், எப்போதும் மிகவும் வெப்பமான சூழ்நிலையில் இருப்பதால், அத்தகையவர்களுக்கும் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் இருப்பதாக 2004 ஆம் ஆண்டில் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வெல்டர்கள்
வெல்டிங் வேலை செய்யும் ஆண்கள் கதிரியக்க வெப்ப வெளிபாட்டில் இருப்பதால், விந்தணுவின் தரம் பாதிக்கப்படுவதோடு, கருவளமும் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சைக்கிளிங்

உங்களுக்கு சைக்கிள் ஓட்டுவது ரொம்ப பிடிக்குமா? அடிக்கடி சைக்கிளில் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வீர்களா? அப்படியெனில் ஒரு வாரத்திற்கு 5 மணிநேரத்திற்கு மேல் சைக்கிளை ஓட்டாதீர்கள். ஏனெனில், 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆய்வில், வாரத்திற்கு 5 மணிநேரத்திற்கு மேல் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு விந்தணுவின் அடர்த்தி குறைவாக இருப்பதோடு, விந்துவின் இயக்கமும் குறைவாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

ஜிம் ட்ரைனர் மற்றும் விளையாட்டு வீரர்கள்

விளையாட்டு வீரர்கள் நீண்ட தூரம் ஓடுவதால், அது அவர்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைத்து, விதைப்பையில் வெப்பத்தை அதிகரித்து, விந்தணுவின் உற்பத்தியைப் பாதிக்கும். இதேப் போல் தான், ட்ரெட்மில்லில் நீண்ட நேரம் ரன்னிங் மேற்கொண்டாலும், விந்தணுவின் உற்பத்தி பாதிக்கப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாய்களோடு போட்டி போட்டு ஊளையிடும் குழந்தை..!! வீடியோ
Next post வழிமறித்து, கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து பாலியல் அத்துமீறல்..!! (வீடியோ)