தலைமுடி வளர இப்படியும் செய்யலாமா…!!

Read Time:2 Minute, 58 Second

%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9aதலைமுடி உதிர்வது ஆண், பெண் இருவருக்குமே மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. அதற்கு மன உளைச்சல், கெமிக்கல் பொருட்கள், ஆரோக்கியமற்ற உணவுகள், ஊட்டச்சத்து குறைபாடு என பல காரணங்கள் உண்டு. குறிப்பாக, ஆண்களுக்கு முடி உதிர்தல் அதிகரிக்கும்போது வழுக்கை விழ ஆரம்பித்துவிடுகிறது.

முடி உதிராமல் இருக்க நாமும் என்னென்னவோ முறைகளை கையாண்டிருப்போம். மார்க்கெட்டில் வரும் அத்தனை ஷாம்புகளையும் உபயோகப்படுத்திப் பார்த்திருப்போம். ஆனால் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றி முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தவும் முடியின் வளர்ச்சியைத் தூண்டவும் முடியும்.

இராசயனங்கள் எதுவும் பயன்படுத்தாமல், இயற்கையான வழிகளில் முடி உதிர்தலைத் தவிர்க்க முடியும்.
ஆண்களுக்கு மிகவும் பிடித்தது பீர். அந்த பீரை வெறுமனே குடிப்பதை விடவும் அதை தலையில் கொஞ்சம் தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வது உடனடியாக நின்றுவிடும் என்றால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை.
தலைக்கு மருதாணி, வாழைப்பழம், முட்டை, வெந்தயம் என பலவற்றைக் கொண்டு பேக் போடுவோம். அவற்றோடு கொஞ்சம் பீரையும் சேர்த்து பேக் போட்டால் முடி உதிர்வது குறைந்து, வளர்ச்சி அதிகரிக்குமாம்.

அந்த பேக் எப்படி தயார் செய்வது?
முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் இரண்டிலுமே புரதச்சத்து நிறைந்திருக்கிறது. அதை தலைக்கு அப்படியே முழுமையாகப் பயன்படுத்தலாம்.

ஒரு முழு முட்டையுடன் ஒரு சிறிய வாழைப்பழம், அரை கப் பீர் ஆகியவற்றைச் சேர்த்து, மிக்சியில் நன்றாக அரைத்து, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இந்த பேக்கை தலையில் அப்ளை செய்து அரை மணி நேரம் வரை அப்படியே உலர விடவும்.

நன்கு உலர்ந்ததும் சீயக்காய் அல்லது வெந்தயப்பொடி அல்லது மென்மையான ஹெர்பல் ஷாம்பு கொண்டு தலையை அலசவும்.

இதை வாரத்துக்கு ஒருமுறை தொடர்ந்து செய்து வந்தால் மிக விரைவாக முடி உதிர்தல் குறையும். இயற்கையாகவே முடி வளர அதன் வளர்ச்சியைத் தூண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாம்பத்தியம் இல்லாத இல்வாழ்க்கை?..!!
Next post ஜெயலலிதா மரணம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு..!!