By 9 January 2017 0 Comments

பெண்களே முன்னழகை சிக்கென வைத்து கொள்ள டிப்ஸ்..!!

46பல பெண்கள் மார்பகங்களை சரியான அளவில் வைத்துக் கொள்வதை தங்களது உடல் பாராமரிப்பில் சிரமமாக கருதுகின்றனர். மார்பகங்கள் பெரியதாக உள்ளவர்களுக்கு தோள்பட்டை வலி ஏற்படுகின்றன. அதையும் தாண்டி, மார்பகங்கள் பெரியதாய் இருப்பதால் பெண்கள் எதிர்க்கொள்ளும் பெரிய அவஸ்த்தையே அவர்களது வெளித்தோற்றம் தான்.

எவ்வளவு அழகாக இருந்தாலும், அளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சி பெண்களுடைய அழகினை சீர்கெடுத்து விடுகிறது. உங்களுடைய மார்பகங்களை சிக்கென வைத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் இயற்கையான வழிமுறைகளை கையாண்டாலே போதும், உங்களுடைய மார்பகங்களை சரியான அளவில் பேணிக்காக்க முடியும்.

இப்போது மார்பகங்களை சிக்கென வைத்துக் கொள்ள எளிதான வழிகளை பார்க்கலாம்.. கார்டியோ பயிற்சி மேற்கொண்டு வந்தால் நீங்கள் எளிதாக உங்கள் மார்பக பகுதிகளில் உள்ள கொழுப்புகளை குறைக்க இயலும். தொடர்ந்து 10 நாட்கள் கார்டியோ பயிற்சிகளை செய்து வந்தலே இதன் பலனை நீங்கள் கண்கூடப் பார்க்கலாம்.

மார்பக அளவை இயற்கையான முறையில் குறைக்க, ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி மிக எளிதான வழியில் விரைவில் நல்ல பயன் தரும். இயற்கையான எண்ணெய்களை கொண்டு உங்களது மார்பக பகுதிகளில் மசாஜ் செய்வதும், உங்களது மார்பக அளவை குறைக்க நல்ல பயன் தருவதாய் உடற்பயிற்சி நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை கிரீன் டீ பருகி வந்தால், உங்களது மார்பக அளவை குறைக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவும். அதுமட்டுமல்லாது தினமும் கிரீன் டீ பருகுவது உடல்நலத்திற்கும் நன்மை விளைவிக்கும். முட்டையின் வெள்ளை கருவினை ஒரு டீஸ்பூன் வெங்காயத்தின் சாறோடு கலந்து உங்களது மார்பகங்களில் மாஸ்க் செய்து வந்தால் உங்கள் மார்பகங்கள் இறுக்கமடையும்.



Post a Comment

Protected by WP Anti Spam