போத்தல் மூடியை விழுங்கிய நபர்- ஆணுறையை பயன்படுத்தி எடுத்த வைத்தியர்கள்..!!
தவறுதலாக விழுங்கிய பியர் போத்தல் மூடியை, ஆணுறை உதவியுடன் மருத்துவர்கள் வெளியே எடுத்த சம்பவம் சீனாவில் வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜியாங்க்சூ மாகாணத்தைச் சேர்ந்தவர் லியு. இவர், நண்பர்களுடன் சேர்ந்து அவ்வப்போது, மது அருந்துவது வழக்கம்.
இந்நிலையில், சில நாட்கள் முன்பாக, லியு பியர் குடித்துள்ளார். வயிறு முட்ட பியர் குடித்த அதோடு சேர்த்து பியர் போத்தல் &மூடியையும் விழுங்கிவிட்டார்.
இதையடுத்து, அவர் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்றில் சிக்கிக் கொண்ட பியர் பாட்டில் மூடியை எப்படி வெளியே எடுப்பது என நீண்ட நேரம் விவாதித்தனர்.
பின்னர், ஆணுறையை பயன்படுத்தி இதை சரி செய்யலாம் என முடிவுக்கு வந்தனர்.
பின்னர், அறுவைச் சிகிச்சையின் போது ஆணுறை வாய்ப்பகுதியை படிப்படியாக வயிற்றுக்குள் விட்டு, அதற்குள் காற்றை ஊதியதும், நீளமாக உப்பியிருந்த ஆணுறை முனையில் பாட்டில் மூடி சிக்கியது.
பின்னர் அது ஆணுறைக்குள்வந்துவிட்டது. இதனை மெதுவாக, வெளியே எடுத்து அறுவைச் சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாய் முடித்தனர்.
Average Rating