வயோதிபத்திலும் சுறுசுறுப்பாக இருக்க டிப்ஸ்..!!

Read Time:2 Minute, 50 Second

201612230812389363_tips-to-be-active-old_secvpfமுதுமை வந்தாலே வாழ்க்கை பிடிப்பு இல்லாமல் போய்விடும். எதிலும் விருப்பம் இருக்காது. சோம்பல் தானாக வந்து ஆக்கிரமித்துக் கொள்ளும். முதுமையிலும் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி என்று ஒரு ஆய்வு நடத்தினார்கள். அதன்படி பீட்ரூட் ஜூஸ் பருகினால் முதுமையையும் சுறுசுறுப்பாக மாற்ற முடியும் என்று தெரிவிக்கிறார்கள்.

பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து அதிகமாக இருக்கிறது. இதனால் பீட்ரூட் சாப்பிட்டால் உடலுக்கு ஆக்சிஜன் அளவு அதிகம் தேவைப்படாது.

வாரத்துக்கு ஆறு நாட்கள் பீட்ரூட் ஜூஸ் அருந்தினால் மிகவும் ஆரோக்கியமும், சோம்பல் இல்லாமலும் இருக்கும் என்று பிரிட்டன் எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

இதன் தலைவர் விஞ்ஞானி கேட்டி வான்லி கூறும்போது, “முதியவர்கள் சிறிய வேலைகளை செய்தால் கூட மிகவும் சோர்வடைந்து விடுகிறார்கள். வயதாகும்போது அவர்களின் உடலில் உள்ள ரத்த நாளங்கள் சுருங்கி விடும் என்பதுதான் இதற்கு காரணம். இதனால் திசுக்களுக்கு போதிய அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் உடல் சோர்வடைந்து விடும்.

எனவே, ஆய்வில் கலந்து கொண்ட முதியவர்களுக்கு ஆக்சிஜன் தேவையை குறைப்பதற்காக பீட்ரூட் ஜூஸ் கொடுக்கப்பட்டது. பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட் சத்து, அவர்களின் ரத்த நாளத்தை விரிவடையச் செய்தது. ரத்த ஓட்டம் எளிமையாக நடந்ததால் திசுக்களுக்கு வழக்கமாக தேவைப்படும் ஆக்சிஜன் அளவு 12 சதவீதம் குறைந்தது. அவர்கள் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்தாலும் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக இருந்தார்கள்“ என்றார்.

அதேநேரம் பீட்ரூட் ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களின் உடல்நிலையை பொறுத்து செயல்படக்கூடியது. அதனால் பீட்ரூட் ஜூஸ் அருந்துவதற்கு முன்பு முதியவர்கள் தங்கள் உடலுக்கு ஒத்துவருமா என்று மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு அதன்பின் அருந்துவது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிவப்பு நிறம்தான் ரொமான்ஸுக்கு சிறந்ததாம்..!!
Next post பெண்களே வாழ்க்கையில் முன்னேற முதுகெலும்பு முக்கியம்..!!