மூக்கில் உள்ள சொரசொரப்பான கரும்புள்ளியைப் போக்க டிப்ஸ்..!!

Read Time:2 Minute, 19 Second

201610060741289124_home-remedies-for-nose-blackheads_SECVPFகரும்புள்ளிகள் எண்ணெய் பசை சருமத்தினருக்கு அதிகம் இருக்கும். இம்மாதிரியான புள்ளிகள் வருவதற்கு காரணம், சருமத்துளைகளில் அழுக்குகளின் தேக்கம் அதிகம் இருப்பது தான். இந்த கரும்புள்ளிகளைப் போக்க சில நம்பத்தகுந்த வீட்டு வைத்தியங்களை கீழே பார்க்கலாம்.

* 1 டேபிள் ஸ்பூன் பட்டை பொடியுடன் தேன் கலந்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் இரவில் படுக்கும் முன் தடவி, மறுநாள் காலையில் தேய்த்துக் கழுவி, சுத்தமான காட்டன் துணியால் துடைத்து எடுக்க கரும்புள்ளிகள் நீங்கும்.

* 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன் சரிசம அளவில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

* கிரீன் டீ பொடி அல்லது இலையை நீரில் கலந்து, கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை செய்து வந்தால், சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.

* 1 டேபிள் ஸ்பூன் உப்பை 1/2 கப் நீரில் கலந்து நன்கு கரைந்த பின், கடலை மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி நன்கு உலர்ந்த பின், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

* முல்தானி மெட்டி பொடியுடன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, நன்கு உலர்ந்த பின் நீரில் கழுவ வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அதி உயர் எச்சரிக்கை..!!
Next post பெண்ணை கைது செய்து பாலியல் சேட்டை செய்யும் போலீஸ்..!! (வீடியோ)