பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அதி உயர் எச்சரிக்கை..!!

Read Time:1 Minute, 55 Second

Arial-view-of-river-Niger-in-Lokoja4இங்கிலாந்தின் கிழக்கு கரையோரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அதி உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சூறாவளியுடனான வெள்ளப்பெருக்கு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள எச்சரிக்கையில் கடல்மட்டத்தில் மூன்று மீட்டர் வரையிலான பாரிய அலைகள் கரையை நோக்கி எழும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கரையோர பிராந்தியத்தில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள் பாதிப்படையும் என காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.இன்று இரவு 12.30 ஜி.எம்.ரி. மணியளவில் இந்த இயற்கை அனர்த்தம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு பொது மக்களை நகர்த்தும் பணி தற்போது இடம் பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஜேவிக், எசெக்ஸ்,கிரேற் யாமவுத் மற்றும் நோபோக் ;ஆகிய பிரதேசங்கிளில் மக்களை வெளியேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சூறாவளிக்கு முன்னதாக கடும் காற்று வீசுவதுடன், பனி, மற்றும் ஐஸ் அதிக அளவில் உருவாகுவதாக குறிப்பிடப்பட்டள்ளது.பிருத்தானிய இராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயிற்று உபாதைகளை குணப்படுத்தும் வெண்டைக்காய்..!!
Next post மூக்கில் உள்ள சொரசொரப்பான கரும்புள்ளியைப் போக்க டிப்ஸ்..!!