அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் நாளை தொடக்கம்: பெடரர் `ஹாட்ரிக்’ பட்டம் பெறுவாரா?

Read Time:2 Minute, 28 Second

Tennis.Federer.1jpg.jpgஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியா ஓப்பன், பிரெஞ்சு ஓப் பன், விம்பிள்டன், அமெ ரிக்க ஓப்பன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டி நடைபெறும்.இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாம் போட்டி யான அமெரிக்கா ஓப்பன் டென்னிஸ் போட்டி நிï யார்க் நகரில் நாளை தொடங்குகிறது. முன்னணி வீரர், வீராங்கனை கள் சாம்பியன் பட்டத்திற்காக போராடுவார்கள். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

உலகின் முதல் நிலை வீரரான ரோஜர் பெடரர் 2004-ம் ஆண்டும், கடந்த ஆண் டும் அமெரிக்க ஓப்பனில் சாம்பியன் ஆனார். ஹாட்ரிக் பட்டம் பெறும் முனைப்பில் அவர் உள்ளார். ரபெல் நடால் (ஸ்பெயின்), ஆண்டி ரோட்டிக் (அமெரிக்கா) ஆகியோர் அவருக்கு கடும் சவாலாக இருப்பார்கள்.

பெண்கள் பிரிவில் கிம் கிலிஸ்டர்ஸ் (பெல்ஜியம்), ஹெனின் (பெல்ஜியம்), ஷரபோவா (ரஷியா), மார்ட் டினா ஹிங்கிஸ் (சுவிட்சர் லாந்து), சுவெட்லனா (ரஷியா), மவ்ரெஸ்மோ (பிரான்ஸ்) போன்றவர்கள் சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் உள்ளனர். காயம் காரணமாக வீனஸ் வில்லியம்ஸ், விலகி உள்ளார்.

இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சானியா மிர்சா தொடக்க சுற்றில் குரோசியாவை சேர்ந்த கரோலினாவை எதிர் கொன் றார்.

டென்னிசின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த ஆந்த்ரே அகாசியின் கடைசி போட்டி இதுவாகும். இந்தப் போட்டி யின் முடிவில் அவர் ஓய்வு பெறுகிறார். 1987-ம் ஆண்டு பிரவேசமானார். 8 கிராண்ட் சிலாம் உள்பட 60 ஒற்றையர் பட்டங்களை வென்று உள்ளார். 800 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார் 271 ஆட்டத்தில் தோற்றுள்ளார். டென்னிஸ் உலகில் அனைவராலும் மறக்க முடியாதவர் அகாசி

Tennis.Federer.1jpg.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விடுதலைப் புலிகளின் தாக்குதலில் 6 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்
Next post திரிகோணமலை: ராணுவ நிலைகள் மீது புலிகள் தாக்குதல்