நடிகை திரிஷா மரணம்- நடந்தது இது தான்..!!

Read Time:1 Minute, 49 Second

trisha-poster-13-1நடிகை த்ரிஷா பீட்டா அமைப்பின் தூதுவராக இருப்பதால் அவர் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர் என கருதி நடிகை த்ரிஷாவுக்கு எதிராக, ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் ;நடிகை த்ரிஷா எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு அகால மரணமடைந்தார் என போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

நடிகை த்ரிஷா கர்ஜனை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்தது.இதனையடுத்து படப்பிடிப்பு தளத்தை முற்றுகையிட்ட ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் நடிகை த்ரிஷாவின் கேரவனை முற்றுகையிட்டு படப்பிடிப்பையே நிறுத்தினர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் த்ரிஷாவுக்கு எதிராக மீம்ஸ்கள் போட்டு அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஒரு படி மேலே சென்று நடிகை த்ரிஷா எயிட்ஸ் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார் என போஸ்டர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதில் த்ரிஷாவின் குடும்பத்தையும் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து நடிகை த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மன உளைச்சலே நோய் பாதிப்புக்கு காரணம்..!!
Next post கரும்பு எப்போதும் இனிப்பதில்லை..!! (கட்டுரை)