உதட்டை சுற்றிலும் உண்டாகும் கருமையை போக்கும் குறிப்புகள்..!!

Read Time:2 Minute, 22 Second

201610041115192606_lip-around-the-darkness-clear-tips_SECVPFஉதடு சிவந்திருந்தாலும் உதட்டை சுற்றிலும் சிலருக்கு கோடு போட்டது போல் கருப்பாக இருக்கும். அது உதட்டில் ஈரப்பதம் இல்லாமல் இருக்கும்போது கருத்துவிடும். பித்த உடம்பாக இருந்தாலும் உதடு கருக்கும். அல்லது அடிக்கடி நாவினால் உதட்டை ஈரப்படுத்தும்போதும் உதடு கருப்பாகும்.

மிகச் சிறந்த வழி அடிக்கடி நீங்கள் நீர் குடித்துக் கொண்டிருக்க வேண்டும். இதனால் உதடு கருக்காமல் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் உதடு கருப்பாகிவிட்டால் என்ன செய்யலாம். கருத்த உதட்டை மீண்டும் பழைய நிறத்திற்கு கொண்டு வர என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

எலுமிச்சை சாற்றில் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து உதட்டில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவவும். தினமும் இப்படி செய்து வாருங்கள். கருமை மறைந்து உதடு பளிச்சிடும்.

யோகார்டில் உள்ள லாக்டிக் அமிலம் கருமையை அகற்றும் சக்தி கொண்டது. தினமும் யோகர்ட்டை உதட்டில் தடவி வாருங்கள். யோகார்ட் இல்லையென்றால் தயிர் தடவலாம். வேகமாக கருமையை மறையச் செய்யும்.

ஈரப்பதம் குறையும் போதும் உதட்டைச் சுற்றிலும் கருமை ஏற்படும். இதனை தவிர்க்க தினமும் வெண்ணெயை உதட்டில் தடவுங்கள். அது போல், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெயும் ஈரப்பதத்தை அளித்து மென்மையாக்கும். இதனால் கருமை நாளடைவில் மறையும்.

ரோஸ் வாட்டர் உதட்டில் ஏற்படும் கருமையை போக்க சிறந்தது. ரோஸ் வாட்டரை சிறிது பஞ்சில் நனைத்து உதட்டை சுற்றிலும் தடவி இரவில் படுக்கச் செல்லுங்கள். தினமும் இரவில் இப்படி செய்து வந்தால் ஒரு சில வாரங்களில் கருமை மறைந்து சிவப்பாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அந்த விஷயத்தில் ஆண்கள் இப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டுமென பெண்கள் எதிர்பார்க்கிறார்களாம்..!!
Next post காவலாளியை கிண்டல் செய்தவருக்கு நேர்ந்த பரிதாப நிலை..!! (வீடியோ)