ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ‘ராவணன்’ படப் பாடலுக்கு மறுவடிவம் தந்த சுருதி ஹாசன்..!!

Read Time:1 Minute, 54 Second

201701141615249343_Shruti-Haasan-sings-with-A-R-Rahman-to-recreate-Raavan-song_SECVPFமணி ரத்தினம் இயக்கத்தில் முன்னர் வெளியான ‘ராவணன்’ இந்திப் படத்தில் இடம்பெற்ற ’ரஞ்சா, ரஞ்சா’ என்ற பாடலுக்கு நடிகை சுருதி ஹாசன் தற்போது மறுவடிவம் தந்து பாடியுள்ளார்.

எம்.டி.வி. தயாரித்துள்ள ’ராயல் ஸ்டாக் பேரல் சீசன் சிக்ஸ்’ இசை நிகழ்ச்சிக்காக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இந்தப் பாடலை பாடிய அனுபவம் தொடர்பாக சுருதி ஹாசன் கூறியதாவது:-

ஐஷ்வர்யா ராய் பச்சனுக்காக ரேகா பரத்வாஜ் முன்னர் பாடியிருந்த பாடலை தற்போது நான் பாடியுள்ளதை மிகவும் சிறப்புக்குரிய அனுபவமாக கருதுகிறேன். ஒரு பாடகியாகவும் இசையமைப்பாளராகவும் சில எல்லைகளை கடந்து புதிதாக ஏதாவது சாதிப்பதை நான் மகிழ்ச்சியுடன் விரும்புகிறேன்,

குறிப்பாக, நான் உயரத்தில் வைத்து பார்க்கும் ரஹ்மான் சாரிடம் இருந்து இந்த வாய்ப்பு வந்தபோது, இதை தவிர்க்கவே முடியாது என்பதை உணர்ந்து, மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டேன்.

உயிர்ப்புடன் உள்ள பெரிய இசைக்குழுவுடன் ஒருங்கிணைந்து இந்தப் பாடலை பாடிய அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியானதும், திருப்தியானதுமாக அமைந்திருந்தது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சுருதி ஹாசன் பாடிய இந்தப் பாடல் இன்றிரவு 8 மணிக்கு எம்.டி.வி. இசை சேனலில் ஒளிபரப்பாகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post களைப்பை போக்கும் மருந்து..!!
Next post அடர்த்தியான புருவத்திற்கு இரவில் செய்ய வேண்டிய மசாஜ்..!!