மொஸ்கோ ஹோட்­ட­லில் டொனால்ட் ட்ரம்ப் படுக்­கையில் சிறுநீர் கழித்­தாராம்; ரஷ்ய புலனாய்வாளர்களிடம் வீடியோ..!!

Read Time:7 Minute, 27 Second

217862017-01-11T214147Z_99288514_RC16FA6408C0_RTRMADP_3_USA-TRUMPஅமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ள டொனால்ட் ட்ரம்ப் 5 வருடங்களுக்கு முன்னர் ரஷ்ய ஹோட்­ட­­லொன்றில் விலை­மாது ஒரு­வ­ரிடம் பாலியல் உறவு கொண்­ட­தா­கவும் ஹோட்டல் அறையின் படுக்­கையில் சிறுநீர் கழித்­த­தா­கவும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத தக­வல்கள் வெளி­யா­கி­யமை பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

டொனால்ட் ட்ரம்பின் பாலியல் நட­வ­டிக்­கைகள் அடங்­கிய வீடியோ ஒளிப்­ப­தி­வுகள் ரஷ்ய புல­னாய்­வா­ளர்­க­ளிடம் இருப்­ப­தா­கவும் டொனால்ட் ட்ரம்ப் குறித்த பல தகவல்களை ரஷ்ய புல­னாய்­வுத்­து­றை­யினர் சேக­ரித்து வைத்­துள்­ள­தா­கவும் செய்தி வெளி­யா­கி­யுள்­ளது.

டொனால்ட் ட்ரம்பை மிரட்­டு­வ­தற்கு இந்த இர­க­சிய ஆவ­ணங்­களை ரஷ்யா பயன்­ப­டுத்தி வரு­வ­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

பிரித்­தா­னிய புல­னாய்வு அமைப்பின் உள­வா­ளி­யான கிறிஸ்­டோபர் டேவிட் ஸ்டீலினால் தொகுக்­கப்­பட்ட ஆவ­ண மொன்றில், இது தொடர்­பான விப­ரங்கள் தெரிவிக்­கப்­பட்­டுள்­ள­தாக அமெ­ரிக்க ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன. சி.என்.என். தொலைக்­காட்சி இத்­த­க­வலை முதலில் வெளி­யிட்­டது.

மொஸ்கோ ரிட்ஸ் கார்ல்டன் ஹோட்­டலில் தங்­கி­யி­ருந்த டொனால்ட் ட்ரம்ப் பாலியல் தொழி­லா­ளிகள் பலரை ஹோட்டல் அறை­க­ளுக்கு அழைத்துச் சென்­ற­தா­கவும் ஹோட்டல் அறையின் படுக்­கையில் டொனால்ட் ட்ரம்ப் சிறுநீர் கழித்த­தா­கவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், டொனால்ட் ட்ரம்ப், இச்­ செய்­திகள் பொய்­யா­னவை எனக் கூறி­யுள்ளார். தான் ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்­ட­வுடன் நியூ­யோர்க்கில் நேற்­று­ முன்­தினம் நடைபெற்ற செய்­தி­யாளர் மாநா­டொன்றில் பங்­கு­பற்­றிய டொனால்ட் ட்ரம்ப், தன்னைப் பற்றி உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத செய்திகளை ஊட­கங்கள் வெளி­யி­டு­வ­தாக குற்றம் சுமத்தினார்.

ரஷ்யா உட்­பட வெளி­நா­டு­க­ளுக்கு தான் பயணம் செய்­யும் ­போ­தெல்லாம், ஹோட்டல் அறை­களில் இர­க­சிய கெம­ராக்கள் பொருத்­தப்­பட்­டுள்­ள­னவா என்­பதில் தான் கவ­ன­மாக இருப்­பது வழக்கம் எனவும் டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்ளார்.

2013 ஆம் ஆண்டு மொஸ்­கோவில் நடை­பெ­ற்ற மிஸ் யூனிவர்ஸ் அழ­கு­ ராணி போட்டியின்­போது தான் மொஸ்­கோ­வுக்குச் சென்­றி­ருந்­த­தா­கவும் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அக் ­கா­லத்தில் மிஸ் யூனிவர்ஸ் போட்­டி­களை நடத்தும் நிறு­வ­னத்தின் உரி­மை­யா­ள­ராக டொனால்ட் ட்ரம்ப் விளங்­கி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.

‘என்னைச் சூழ மெய்ப்­ பா­து­கா­வ­லர்கள் இருப்பர். ‘உங்கள் ஹோட்டல் அறை­களில் மற்றும் நீங்கள் எங்கு சென்­றாலும் அங்கே கெம­ராக்கள் இருக்­கக்­கூடும் என நான் அவர்க­ளுக்கு எப்­போதும் கூறுவேன்’ என டொனால்ட் டரம்ப் தெரி­வித்தார்.

‘கெம­ராக்கள் குறித்து நீங்கள் கவ­ன­மாக இருக்க வேண்டும். இல்­லா­விட்டால் இரவு நேர தொலைக்­காட்­சி­களில் நீங்கள் பார்க்­கப்­ப­டு­வீர்கள்’ எனவும் அவர் கூறினார்.

சி.என்.என். தொலைக்­காட்சி பொய் செய்தி வெளி­யி­டு­வ­தா­கவும் டொனால்ட் ட்ரம்ப் கூறினார். இச்­செய்­தி­யாளர் மாநாட்டில், சி.என்.என். செய்­தி­யாளர் ஜிம் அக்­கோட்­டா­வுடன் டெனால்ட் ட்ரம்ப் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்டார்.

அச் ­செய்­தி­யாளர் கேள்வி கேட்­ப­தற்கும் டொனால்ட் ட்ரம்ப் அனு­ம­திக்க மறுத் தார். ‘நீங்கள் போலிச் செய்­திகள்’ என அவர் கூறினார்.

ரஷ்­யாவும் மறுப்பு

இதே­வேளை, ரஷ்ய ஜனா­தி­பதி மாளி­கையும் டொனால்ட் ட்ரம்ப் தொடர்­பான மேற்­படி செய்­தி­களை மறுத்­துள்­ளது.

இது குறித்து ரஷ்ய அதிபர் விளா­டிமிர் புட்­டினின் செய்தித் தொடர்­பாளர் டிமித்ரி பெஸ்காவ் கூறும்­போது, ‘இவை அர்த்த மற்ற சோடிக்­கப்­பட்ட தக­வல்கள். ரஷ்யா, அமெ­ரிக்­கா­வுக்கு இடை­யி­லான உறவை சீர்­கு­லைக்கும் முயற்­சி­யாக இத்­த­கைய தக­வல்கள் வெளி­யிடப் பட்­டுள்­ளன’ எனக் கூறி­யுள்ளார்.

ஆனால், டொனால்ட் ட்ரம்பின் பாலியல் வீடி­யோவை தவிர வேறு பல ஆவ­ணங்­களும் ரஷ்­யா­விடம் இருக்­கக்­கூடும் என அமெ­ரிக்கப் புல­னாய்வு அமைப்­பான சி.ஐ.ஏ. நம்­பு­வ­தாக பி.பி.சி. யின் வோஷிங்டன் செய்­தி­யாளர் போல் வூட் தெரி­வித்­துள்ளார்.

டொனால்ட் ட்ரம்பின் செக்ஸ் டேப் குறித்து தெரியவந்ததாக கடந்த ஓகஸ்ட் மாதம், இரண்டாவது தகவல் மூலமொன்றினாலும் தனக்குத் தெரியவந்ததாக போல்வூட் கூறியுள்ளார்.

அத்துடன் டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான ஒன்றுக்கு மேற்பட்ட செக்ஸ் டேப்கள் இருப்பதாக சி.ஐ.ஏ. வட்டாரங்கள் தனக்குத் தெரிவித்ததாகவும் போல் வூட் தெரிவித்துள்ளார்.

இதே­வேளை, அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­த­லிலில் தலை­யீடு செய்­வ­தற்கு ரஷ்யா முயற்­சித்­தி­ருக்­கலாம் என டொனால்ட் ட்ரம்ப் முதல் தட­வை­யாக ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

எதிர்­வரும் 20 ஆம் திகதி ஜனா­ப­தி­யாக பத­வி­யேற்­க­வுள்ள டொனால்ட் ட்ரம்பின் நிர்­வா­கத்தில் வெள்ளை மாளிகை அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக பணி­யாற்­ற­வுள்ள பிரைபஸ் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பருக்களால் வந்த தழும்புகளை நீக்க சில எளிய வழிகள்..!!
Next post முத்தம் பற்றிய முழுத் தகவல் அறிக்கை..!!