நிலவில் இறுதியாக காலடி வைத்த அமெரிக்க விண்வெளி வீரர் காலமானார்..!!

Read Time:1 Minute, 36 Second

93621680_f0a36594-bc03-4280-80ba-03f03c27c5bfநிலவில் இறுதியாக காலடி வைத்த மனிதராக கருதப்படும் அமெரிக்க விண்வெளி வீரர் ஜீன் கேர்னன் (Eugene Cernan) தமது 82 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

ஓய்வுபெற்ற விண்வெளிவீரரான ஜீனின் இழப்பானது ஈடுசெய்ய முடியாதவொன்றென அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

நிலவுக்கு இரண்டு தடவைகள் பயணித்தவர்களில் கேர்னனும் ஒருவர் என்பதுடன் நிலவின் மேற்பரப்பில் 1972 ஆம் ஆண்டில் இறுதியாக கால்தடம் பதித்த மனிதரும் இவராவார்.

“நாம் எவ்வாறு இங்கு வந்தோமோ அவ்வாறே மீண்டும் செல்வோம், மீண்டும் பூமிக்கு திரும்பும் வரை நம் மனித இனத்தின் மீது நம்பிக்கை வைப்போம்” இதுவே ஜீன் கேர்னன் நிலவில் வைத்து பேசிய இறுதி வார்த்தைகளாகும்.

அப்பலோ 17 ஆராய்ச்சி திட்டத்தின் கட்டளைத்தளபதியாக கேர்னன் செயற்பட்டுள்ளார்.

நிலவில் கால்தடம் பதித்த 12 பேரில் தற்போது 6 பேரே உயிருடன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜீன் கேர்னன் உடல் நலக் குறைவின் காரணமாக நேற்று காலமானதாக அவரது குடும்பத்தார் அறிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதீத இச்சை உணர்வு கொண்டுள்ள ஆண்கள் உறவில் செயல்படுத்தும் 3 மைன்ட் கேம்ஸ்..!!
Next post குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக உணவு ஊட்டுவதால் ஆபத்து..!!