தாங்க முடியாத பல்வலிக்கு இயற்கை வைத்தியம்..!!

Read Time:1 Minute, 58 Second

201612101409315071_toothache-natural-remedies_SECVPFஅதிக இனிப்பு சாப்பிடுவதாலும் சரியாக பராமரிக்கவில்லையென்றாலும் பற்களில் கிருமிகள் தாக்கம், பற்சிதைவு, ஈறு வீக்கம் ஆகியவை உண்டாகக் கூடும்.

இதன் காரணமாக வரும் பல்வலி தாங்க முடியாததாக இருக்கும். இந்த வலியை போக்குவதற்கும் பல் பிரச்சனையை போக்குவதற்குமான ஒரு வழி இங்கே சொல்லப்பட்டுள்ளது. படித்து பலன் பெறுங்கள்.

ஆரோக்கியமான ஈறு பற்களை இறுக பற்றியிருக்கும். அடர் பிரவுன் மற்றும் பிங்க் நிறத்தில் இருப்பது ஆரோக்கியமான ஈறாகும். அதுவே செக்க சிவப்பாய் சிவந்திருந்தால் அந்த ஈறு மிகவும் பாதிப்படைந்திருக்கிறது என அர்த்தம்

தேவையான பொருட்கள் :

சுத்தமான தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
கிராம்பு பொடி – அரை ஸ்பூன்

செய்முறை :

முதலில் வெதுப்வெதுப்பான நீரினால் வாயை கொப்பளித்துக் கொள்ளுங்கள். பின்னர் தேங்காய் எண்ணெயில் கிராம்பு பொடியை நன்றாக பேஸ்ட் போல கலக்குங்கள்.

இந்த பேஸ்டை வலி உள்ள பகுதியில் மெதுவாக தடவவும். 10 நிமிடங்கள் அப்படியே விடுங்கள். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். வலி குறைந்திருக்கும்.

இயற்கையாகவே கிராம்பு வலியை மரத்துப் போகச் செய்யும். தேங்காய் எண்ணெய் கிருமிகளை அழிக்கும். அதோடு ஈறுகளுக்கு வலிமை தரும். புண்களை ஆற்றும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குளிர்காலத்தில் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்..!!
Next post ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்களுக்கு தலை வணங்குகிறேன்: நடிகர் விஜய்..!!