பிறப்பால் இல்லாவிட்டாலும், உணர்வாலும், உள்ளத்தாலும் நானும் தமிழச்சிதான் : நயன்தாரா..!!

Read Time:3 Minute, 56 Second

ssநாளுக்கு நாள் தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்கான அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. மதுரை அலங்காநல்லுரிலும், சென்னை மெரினா கடற்கரையிலும் இளைஞர்களின் கூட்டம் தன்னெழுச்சியாக அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.

இந்நிலையில் தமிழர்களின் கலாச்சார மற்றும் பண்பாட்டு அடையாளங்களை மீட்பதற்காக நடைபெற்றும் இந்த தலைமையில்லாத வித்தியாசமான போராட்டத்திற்கு திரையுலகினரும் தங்களின் ஆதரவை அளித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து முன்னணி நடிகையான நயன்தாராவும் இதற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்தஅறிக்கையில்,‘இளைய தலைமுறையின் பலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு விட்டது. கடந்த சில நாட்களாக தமிழகம் கண்டு வரும் எழுச்சி, வரலாற்றில் இல்லாதது என்று சொல்லலாம்.

இந்த தருணத்தில் பிறப்பால் இல்லாவிட்டாலும், உணர்வாலும் உள்ளத்தாலும் நானும் இந்த மாநிலத்தை சேர்ந்தவள் என்னும் பெருமை என்னை தலைநிமிர வைக்கிறது. இளைய தலைமுறையின் இந்த போராட்டம் அமைதியான முறையிலே நடப்பது நம்மை பெருமைப்பட வைக்கிறது.

நான் தமிழ்நாட்டில் பிறந்திருக்காவிட்டாலும் எனக்கு ஒரு அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் பெற்று தந்தது இந்த தமிழ் மண்ணும், தமிழ் மக்களும்தான். இந்த உணர்ச்சிகரமான போராட்டத்தில் அவர்களோடு நான் உறுதுணையாக நிற்பேன் என்பதை உறுதியாக சொல்லி கொள்கிறேன். அவர்களுடன் என்னுடைய குரலும் இணைந்து நம் கலாச்சாரத்துக்கு எதிரான அந்த அந்நிய நாட்டு நிறுவனத்துக்கு நம் பலத்தை காட்டும் என நம்புகிறேன்.

அவர்களின் பொய்யான வாதத்தை உண்மை என்று நம்பிய நமது நீதி மற்றும் அரசு துறைகளுக்கும் நம் குரல் கேட்கும் என நம்புகிறேன். ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் எடுத்து இருக்கும் இந்த உணர்ச்சிகரமான நடவடிக்கை நிச்சயமாக தமிழக கலாச்சாரத்தின் பெருமையை உலகமெங்கும் ஒலிக்க செய்யும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எத்தனை தடைகள் வந்தாலும் அதை தைரியமாக எதிர்கொண்டு, தங்களின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்று தொடர்ந்து இந்த இளைஞர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

ஒரு சராசரி குடிமகளாக நான் அவர்களின் ஒற்றுமைக்கும், தைரியத்திற்கும் தலை வணங்குகிறேன். இவர்களின் இந்த முயற்சி, தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளமான ஜல்லிக்கட்டை, எந்தவித காலதாமதமும் இன்றி மீண்டும் தமிழகத்தில் நிலைநிறுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. நாடெங்கும் ஜல்லிக்கட்டு முழக்கத்தை ஒலிக்கச் செய்வோம்.’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தகவல் : சென்னை அலுவலகம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேன் கலந்த சுரைக்காய் சாறு குடிப்பதால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா?..!!
Next post ஆண் துணை இல்லாமலே முட்டையிட்டு வியக்க வைத்திருக்கும் ‘லியோனி’..!!