நடிகர் சங்க போராட்டத்தில் அஜித், த்ரிஷா பங்கேற்பு..!!

Read Time:2 Minute, 34 Second

201701201131189605_Ajith-Trisha-Participates-Actors-council-support-of_SECVPFதமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக வணிகர்கள், தொழிற்சங்கங்கள், ஆசிரியர்கள், லாரி உரிமையாளர்கள், கடையடைப்பு போராட்டம் என பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சினிமா பிரபலங்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். முன்னதாக ரஜினி, கமல், விஜய், சூர்யா, சிம்பு, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பலர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

மேலும், ஜல்லிக்கட்டுக்காக போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் சார்பில் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தில் நாசர், கார்த்தி, பொன்வண்ணன், மனோபாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் `தல 57′ படத்திற்காக பிசியாக இருந்த அஜித், பல்கேரியாவில் இருந்து சென்னை திரும்பி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்க போராட்டத்தில் மனைவி ஷாலினியுடன் பங்கேற்றுள்ளார். மேலும் பீட்டா அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக கூறிய நடிகை த்ரிஷாவும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்துகொண்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வேப்பிலை..!!
Next post முத்தத்தில் ஆண்கள் செய்யும் தவறுகள் இவைதான்..!!