கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வேப்பிலை..!!

Read Time:2 Minute, 30 Second

201612270958464374_Neem-gives-hair-problems_SECVPFமிகுந்த மருத்துவ குணமிக்கது வேப்பிலை. வேப்பிலையில் அடங்கியுள்ள சக்தி வாய்ந்த பொருட்கள், உடல், சருமம் மற்றும் தலைமுடியில் ஏற்படும் எந்த வகையான பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வைத் தரும்.

குறிப்பாக தற்போது பலரும் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தான் அதிகம் சந்திக்கிறோம் என்பதால், வேப்பிலையை தலைமுடிக்கு எப்படி பயன்படுத்துவது என்றும், அப்படி பயன்படுத்தினால் பெறும் நன்மைகள் என்னவென்றும் பார்ப்போம்.

பொடுகுத் தொல்லையால் கஷ்டப்படுபவர்கள், வேப்பிலை எண்ணெயைக் கொண்டு தலைமுடியை மசாஜ் செய்து வந்தால், பொடுகை அடியோடு விரட்டலாம்.

உங்கள் முடி பொலிவிழந்து உள்ளதா? அப்படியெனில் அதனை வேப்பிலை நீரைக் கொண்டு மாதத்திற்கு இரண்டு முறை அலசி வந்தால், உங்கள் முடி பொலிவோடும், பட்டுப் போன்றும் இருக்கும்.

வேப்பிலை முடியின் வளர்ச்சியைத் தூண்டி, முடி உதிர்வதைக் குறைக்கும். அதற்கு வாரம் ஒருமுறை வேப்பிலை எண்ணெயை தலைக்கு தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து குளிக்க வேண்டும். முக்கியமாக வேப்பிலை எண்ணெய் வழுக்கையான பகுதியிலும் முடியை வளரச் செய்யும்.

ஸ்கால்ப்பில் ஏதேனும் நோய்தொற்றுகள் இருந்தால், அதனை வேப்பிலையைக் கொண்டு விரைவில் போக்கலாம். அதற்கு வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலச வேண்டும்.

உங்களுக்கு தலையில் தாங்க முடியாத அளவில் அரிப்பு ஏற்படுகிறதா? அப்படியெனில் வேப்பிலை நீரைக் கொண்டு தலையை அலசுங்கள். இதனால் தலையில் ஏற்படும் அரிப்பு உடனே அடங்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மெல்பேர்ன் நகரில் பொதுமக்கள் மீது காரால் மோதி தாக்குதல்- மூவர் பலி- 20 பேர் காயம்..!! (வீடியோ)
Next post நடிகர் சங்க போராட்டத்தில் அஜித், த்ரிஷா பங்கேற்பு..!!