பீட்டா அமைப்பை வெளியே அனுப்பினால் சந்தோசம்: நடிகர் விஜய்..!! (வீடியோ)
இந்தியாவில் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பாக உள்ளது. இதற்கு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடை தொடர்வதே காரணமாகும்.
இது இந்திய தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாது உலகத் தமிழர்கள் மத்தியிலே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி உலகின் பல பாகங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
தமிழகத்தில் பெரும் புரட்சியாக மாறியுள்ள இப் போராட்டத்திற்கு ஆதரவாக சில நடிகர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜயும் தற்போது ஆதரவு தெரிவித்து வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதில் “உலகம் முழுக்க சட்டத்தை உருவாக்கியது மக்களின் கலாச்சாரத்தையும், உரிமையையும் பாதுகாக்கதானே தவிர அதை அழிப்பதற்காக அல்ல”
“கைது செய்யப்பட்டவர்களை வெளியே அனுப்பு‘பீட்டா’ நான் சந்தோசப்படுவேன். இவ்வளவுக்கும் காரணமான ‘பீட்டா’ அமைப்பை வீட்டுக்கு அனுப்பு‘பீட்டா’ தமிழ்நாடே சந்தோசப்படும்” எனக்குறிப்பிட்டுள்ளார்.
Average Rating