20 வயது இளம் பெண் செக்ஸ் கல்வியாளராக மாறியதன் காரணம் என்ன?..!!
செக்ஸ் என்ற வார்த்தை இங்கு பலருக்கு ஒரு தீய சொல்லாக இருக்கிறது. ஆனால், செக்ஸ் என்பது உடலுறவு என்பதை தாண்டி, உடல் ஆரோக்கியம், தாம்பத்திய ஆரோக்கியம் ரீதியாக அனைவரும் கற்க வேண்டிய ஒன்றாகும்.
இதை தான் இந்த 20 வயது இளம் இன்ஸ்டா சென்சேஷனல் கில்லரன்டஸ்வீத்தாங் செய்துக் கொண்டிருக்கிறார்…
எய்லீன் கெல்லி!
எய்லீன் கெல்லி என்பவர் நியூயார்க்கை சேர்ந்த ஓர் 20 வயது நிரம்பிய இளம் பிளாகர். இவரை எய்லீன் கெல்லி என்பதை விட கில்லரன்டஸ்வீத்தாங் என்றால் தான் பலருக்கும் தெரியும்.
நியூயார்க் போஸ்ட் பதிவு!
இம்மாதம் வெளியான ஒரு பிரதியில் எய்லீன் கெல்லி பற்றிய ஒரு பதிவு நியூயார்க் போஸ்ட்டில் வெளியாகியிருந்தது. அதில், இவரை பற்றி சர்ச்சையான கருத்துக்கள் வெளியாகியிருந்தது. இவரை ஒரு சர்க்கரை பெண் என்றும், வயதானவர்களை ஈர்ப்பவர் என்றும் குறிப்பிட்டு எழுதியிருந்தனர்.
அதிர வாய்த்த தலைப்பு!
அந்த பதிவின் தலைப்பு “I fuel fantasies of men who want sex with young girls, and I’m fine with it.” என பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த பதிவை தோழிகள் மூலம் கண்டறிந்த எய்லீன் கெல்லி மிகவும் அதிர்ந்து போனார்.
செக்ஸ் கல்வியாளர்!
டம்பளர் (tumblr) போன்ற தளங்களிலும், தனது சொந்த பிளாகிலும் செக்ஸ் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பதின் வயது பெண்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து வருபவர் எய்லீன் கெல்லி. இவரது இன்ஸ்டா பதிவுகளை கண்டு, நியூயார்க் போஸ்ட் இவரை பற்றி பதிவு வெளியிட்டுவிட்டது.
Average Rating