கடலுக்கு அருகே நிற்கும் இளைஞர்களை நெருங்க முடியாத போலீஸ்.. ஆவேச முழக்கமிடும் மாணவர்கள்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 54 Second

jallikattu-protest444-23-1485138669ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஒருவார காலமாக மாணவர்கள் போரடி வருகின்றனர். அவசர சட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறி போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்று போலீசார் கோரிக்கை விடுத்தனர் சட்ட முன்வடிவு நகலையும் மாணவர்களுக்கு அளித்தனர். ஆனாலும் போலீசாரின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர்.

இதனையடுத்து மாணவர்களை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். வலுகட்டாயமாக அகற்றி வரும் போலீசுடன் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல மறுத்து கடலை நோக்கி இளைஞர்கள் சென்றனர்.

தேசிய கீதம் பாடியபடியே தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இளைஞர்கள், பெண்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டனர். ஒருவரை ஒருவர் கைகளை பிடித்துக்கொண்டு கடலுக்குள் நின்றனர். அவர்களை நோக்கி போலீசார் செல்லவே, நீங்கள் அருகில் வந்தால் கடலுக்குள் விழுந்து தற்கொலை செல்வோம் என்று இளைஞர்கள் மிரட்டினர்.

இதனையடுத்து மெரீனா கடற்கரையில் ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. கடந்த ஒருவார காலமாக அமைதியாக நடந்த போராட்டம் தற்போது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மெரீனா கடற்கரை போர்கோலம் பூண்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண் வாரிசு இல்லாத பொறாமையில் பச்சிளம் குழந்தையை மாடியிலிருந்து தூக்கி வீசிய பெண்..!! (வீடியோ)
Next post பீட்டா தலைமையகத்தை முற்றுகையிட்டு அமெரிக்க தமிழர்கள் ஜல்லிக்கட்டு முழக்கம்..!!