அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கி 49 பேர் பலி

Read Time:1 Minute, 52 Second

usa.flag.2.jpgஅமெரிக்காவின் கென்டகி மாகாணம் லெக்சிங்டனில் இருந்து 49 பயணிகளுடன் கிளம்பிய விமானம் புறப்பட்டவுடன் தரையில் விழுந்து வெடித்துத் சிதறியது. இதில் ஒரு விமானி தவிர அனைத்துப் பயணிகளும் உயிரிழந்தனர். லெக்சிங்டனின் புளு கிராஸ் (ஆடூதஞு எணூச்ண்ண் அடிணூணீணிணூt) விமான நிலையத்தில் இருந்து கோம்ஏர் விமானம் அட்லாண்டாவுக்குக் கிளம்பியது. விமான தள ரன் வேயை விட்டுக் கிளம்பிய அடுத்த சில நிமிடங்களில் அந்த விமானம் தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது.

குறைவான நீளம் கொண்ட தவறான ரன் வேயில் இருந்து அந்த விமானம் கிளம்ப முயன்றதால் தான் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. பம்பார்டியர் கனடாஏர் சிஆர்ஜே100 ரகத்தைச் சேர்ந்த ஜெட் விமானம் இது. இந்த விபத்தில் தீவிரவாத சதி ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரன் வேயை விட்டு கிளம்பி ஒரு மைல் மட்டுமே பறந்த நிலையில் அந்த விமானம் கீழே விழுந்தது.

விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் பலியாகிவிட்ட நிலையில் ஒரு விமானி மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. காம்ஏர் விமான நிறுவனம் டெல்டா ஏர்லைன்சுக்கு சொந்தமானதாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பாகிஸ்தானில் ராணுவம்-பழங்குடியினர் மோதல்: 60 பேர் பலி
Next post இஸ்ரேல் வீரரை கடத்தியதால்…