ஆண்களுக்கு ஒரே நேரத்தில் பல பெண்கள் மீது ஈர்ப்பு ஏற்பட என்ன காரணம்?..!!
பொதுவாக நாற்பது வயதிற்கு கீழ் உள்ள ஆண்களுக்கு, ஒரே நேரத்தில் பல பெண்கள் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது.
நீண்ட நாட்களாக ஒரே உறவில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் வேறு நபர் மீது ஈர்ப்பு ஏற்படுவது என்பது மிகவும் இயல்பான ஒன்று தான்.
மேலும் இது மாதிரியான ஈர்ப்புகள் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் பொருந்தும் என்று அறிவியல் ரீதியாகவே நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆண்களுக்கு ஒரே நேரத்தில் பல பெண்கள் மீது ஈர்ப்பு ஏற்பட என்ன காரணம்?
டெக்சாஸ் பல்கலைகழகத்தில் இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், ஆண், பெண், ஒருவர் மீது ஒருவர் 27 பண்புகள் மற்றும் குணங்கள் சார்ந்து தான் ஈர்ப்பு கொள்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
அழகு, புத்தி கூர்மை, உடல்நலம், பொருளாதாரம் இது போன்ற 27 அடிப்படை பண்பு, குணங்களில் ஏதேனும் ஒன்றின் மீது உண்டாகும் அதிகமாக ஆர்வம் தான் மற்ற பெண்கள் மீது ஈர்ப்பாக மாறுகிறது.
ஒருவர் மீது அதிகமாக விரும்பத்தக்கவர்களாக இருக்கும் நபர்கள் தான் மற்ற நபர்கள் மீதும் அதிக ஈர்ப்பு கொள்கிறார்கள், மேலும் இவர்களால் ஒருவரிடம் மட்டும் நேர்மையாக உறவில் இருப்பது கடினம் என்று கூறுகின்றார்கள்
ஒருவர் மீது குறைந்தளவு விரும்பத்தக்க நபர்கள் தான் உறவில் அதிகளவு மகிழ்ச்சியாகவும், மற்ற நபர்கள் மீது அதிகமாக ஈர்ப்பு கொள்ளாமலும் இருக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் தனது துணை வேறு நபர் மீது ஈர்ப்பு கொள்ள கூடாது என்பதற்காக அதிக காதலை வெளிப்படுத்துபவர்களாக இருப்பார்கள்.
ஆண்கள் மற்றும் பெண்களிடம் இது போன்ற மனோபாவம் உள்ளது. ஆனால் அதை பெண்கள் அதிகமாக வெளிப்படுத்துவதில்லை. மேலும் தற்போதைய சமூக வலைத்தள தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இது போன்ற ஈர்ப்புகள் அதிகரித்து வருகின்றது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
Average Rating