அழகை அதிகரிக்க முயலும் போது நாம் செய்யும் தவறுகள்..!!

Read Time:5 Minute, 40 Second

அழகை-அதிகரிக்க-முயலும்-போது-நாம்-செய்யும்-தவறுகள்பத்தில் ஒன்பது பெண்கள் தலைக்கு தினமும் குளித்து அதற்கு அதிகமான மதிப்பைக் கொண்டு வர முடியும் என்றும் அல்லது கண்ணிமைகளை சரியான ஷேப்பிற்கு கொண்டு வருவதற்காக அங்கிருக்கும் முடிகளை பிடுங்குவதற்கும் அனுமதிக்கிறார்கள் என்று சொல்கிறது சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவு. நாம் அனைவருமே தலைமுடி மற்றும் அழகு தொடர்பான தவறுகளை செய்திருப்போம் என்பது உண்மை. ஆனால், அவற்றை எளிதில் சரி செய்து விட முடியும் என்பது தான் நமக்கான நல்ல செய்தி. இவ்வாறு செய்வதன் மூலமாக நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தலாம் என்பதையும் மறுக்க முடியாது.

தேவைக்கு அதிகமாக தலைமுடியை கழுவுதல் தினமும் தலைமுடியை தண்ணீரில் கழுவுவதால் மிகவும் சுத்தமாகவும் மற்றும் டாப் கண்டிஷனிலும் வைக்க முடியும் என்று நாம் நினைத்திருப்போம். இது தவறு. அடிக்கடி தலைமுடியை தண்ணீரில் கழுவுவதால் முடியில் இயற்கையாக இருக்கக் கூடிய எண்ணெய்களை துடைத்து எடுத்து விடுகிறோம். இது நல்லதற்கல்ல என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தேவைக்கு அதிகமாக கண்டிஷனர் பயன்படுத்துதல் ஷாம்புவை பயன்படுத்துவது போலவே, கண்டிஷனரையும் தலைமுடியில் பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். இந்த கண்டிஷனர்களை புதிதாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்கும் தலைமுடியில் ஆழத்தில் பயன்படுத்தாமல், மேல் பகுதியில் பயன்படுத்துங்கள்.
வெப்பத்திலிருந்து பாதுகாப்பதில்லை ஹேர் ட்ரையர்கள் மற்றும் ஹேர் ஸ்ட்ரெய்டனர்களை பயன்படுத்தும் போது நாம் இந்த தவறை செய்கிறோம். எந்தவித பாதுகாப்பு கவசமும் இல்லாமல் தலைமுடியை நேரடியாக ட்ரையரில் காட்டுவது, வறண்ட, சிக்குடைய மற்றும் மோசமான நிலைக்கே முடியை இட்டுச் செல்லும்.

ஒரே இடத்தில் குதிரைவால் போல கட்டுதல் நீங்கள் எப்பொழுதுமே முடியை தூக்கிக் கட்டியவாறு, குதிரைவால் போடுபவராக இருந்தால், அதனை ஒவ்வொரு நாளும் ஒரே இடத்தில் போடுவதை தவிர்க்கவும். இது முடியில் அதிகமான அழுத்தத்தை உருவாக்கவும் மற்றும் காலப்போக்கில் முடியை பலவீனப்படுத்தவும் செய்யும்
மேக்கப் ப்ரஷ்களை கழுவ மறந்து விடுதல் நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டிய பணிகளில் ஒன்றாக இருக்கும் இதை செய்வதைப் பற்றி ஒருமுறை கூட கவலைப்பட்டிருக்க மாட்டீர்கள். உங்களுடைய மேக்கப் ப்ரஷ்களை முறையாக சுத்தம் செய்யத் தவறும் போது, அதில் பல்வேறு வண்ணங்கள் கலந்திருக்கவும், பாக்டீரியாக்கள் வாழவும் வகை செய்துவிடுகிறீர்கள். எனவே வாரத்திற்கு ஒருமுறையாவது, மேக்கப் ப்ரஷ்களை கழுவ வேண்டும் என்ற குறிக்கோளை உருவாக்கிப் பின்பற்றுங்கள்.

கழுத்தை கவனிப்பதில்லை உங்களுடைய சருமத்தை பாதுகாப்பதன் ஒரு பகுதியாக, கழுத்தில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்வதையும் மற்றும் கழுத்துக்குத் தேவையான ஈரப்பதத்தைக் கொடுப்பதையும் உறுதி செய்யுங்கள். தேய்த்து குளிக்கும் போது, தாடையுடன் நிறுத்தி விடாமல், மென்மையாக வெளியே தெரிந்து கொண்டிருக்கும் கழுத்தின் தோல் பகுதியையும் சற்று கவனியுங்கள். மிகவும் சென்சிட்டிவ்வான இந்த பகுதியை கவனிக்க வேண்டியதும் முக்கியமானதாகும்.

அளவுக்கு அதிகமாக எதுவும் வேண்டாம் உங்களுடைய முகத்தின் எல்லாப் பகுதிகளிலும் கிரீம்களை தடவுவது எளிதான செயலாக இருந்தாலும், அவ்வாறு செய்ய வேண்டாம். சில மணிநேரங்களுக்கு உங்களுடைய தோல் பகுதிகளில் வீற்றிருக்கக் கூடிய இந்த கிரீம்களின், அட்டைகளில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டும் தகவல்களைப் படித்துப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும். அதே போல, அவற்றைக் கொண்டு முழுமையான மேக்கப்பும் செய்ய வேண்டாம். உங்களுடைய தோலுக்கு சுவாசமும் தேவை என்பதை உணருங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நட்பை காப்பாற்றிய நாய்..!! (அசத்தல் வீடியோ)
Next post தாம்பத்யம் – மனம்விட்டுப் பேசுங்கள்..!!