வவுனியாவில் உண்ணாவிரதம் தொடர்கிறது ; ஆதரவாக தமிழ் அரசியல் கைதிகளும் போராட்டத்தில் குதிப்பு..!!

Read Time:4 Minute, 49 Second

dfgdgகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளியிடக்கோரியும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியா தபால் நிலையம் அருகே இன்றைய தினம் 3 ஆவது நாளாக உண்ணாவிர போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடுமுழுவதும் உள்ள தமிழ் அரசியல் கைதிகள்அனைவரும் நாளை வியாழக்கிழைமை ஒருநாள் அடையாள உண்ணவிரத போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து 5 முக்கிய அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணவிரத போராட்டதை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்துள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகள் உடல்நிலை மிகவும் சோர்வடைந்து காணப்பட்டதால் மருத்துவர்கள் அவ்விடத்துக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

அவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகள், இளைஞர்கள் உட்பட பலர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அரசியல் கைதிகளும் தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 10 பேரும் அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 18 பேரும் கண்டி தும்பர சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 19 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 10 பேரும் அத்துடன் ஏனைய சிறகைளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஒன்றிணைந்து ஒருநாள் அடையாள உண்ணவிரத போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அந்தந்த சிறைச்சாலை நிர்வாகத்தினருக்கு அறிவித்துள்ளனர்.

பூஸா முகாமில் இரண்டாயிரம் பேரை தடுத்து வைத்திருக்கும் பிரிவில் இரண்டு பேரை மாத்திரம் தடுத்து வைத்திருப்பதை கண்டித்தும் தம்மை சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரியும் 2 தமிழ் அரசியல் கைதிகள் இன்றில் இருந்து உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பத்துள்ளனர்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட தங்கராசா விமலன் மற்றும் கனகரத்தினம் ஆதித்தன் ஆகிய இருவரும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு நீதிமன்றில் அவர்களின் வழக்கு இடம்பெற்று வந்தது. பின்னர் 2012 ஆம் ஆண்டு மேலதிக விசாரணைக்கான பூஸா முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு 15 கீழ் 1 என்ற பிரிவில் இன்றுவரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரம் பேர் தடுத்து வைக்கக்கூடிய அப் பிரிவில் 2 பேர் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். தாம் காரணம் தெரியாமல் அங்கு தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தம்மை தங்கலை சிறைக்கு மாற்றி தமது வழக்கு விசாரணைகள் இடம்பெற வேண்டும் என கோரி இன்றில் இருந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். தமது நிலை அறிந்து தமிழ் அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கவனம் எடுத்து குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு இரு அரசியல் கைதிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை அரசால் உரிய தீர்வு அறிவிக்கும் வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என உறவினர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஷாரூக்கானை பார்க்க குவிந்த ரசிகர் கூட்டத்தில் உயிரிழப்பு: விசாரணைக்கு போலீசார் உத்தரவு..!!
Next post தண்ணீர் அள்ளித்தரும் ஆரோக்கியம்..!!