பாகிஸ்தானில் முதன்முறையாக கொண்டாடப்பட்ட திருநங்கையின் பிறந்த தினம்..!!

Read Time:2 Minute, 40 Second

dssdsதிருநங்கைகளை ஒடுக்கி வைத்திருக்கும் பாகிஸ்தானில், முதன்முறையாக திருநங்கைகள் ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் விழா ஒன்றை நடத்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

பாகிஸ்தானின் 190 மில்லியன் சனத்தொகையில் சுமார் 5 இலட்சம் பேர் திருநங்கைகளாவர். எனினும் இவர்களுக்குரிய குறைந்தபட்ச உரிமைகள் கூட இதுவரையில் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், திருநங்கைகள் சிலர் ஒன்று கூடி, பெஷாவர் நகரில் உள்ள ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் விழா ஒன்றை நடத்தியுள்ளனர்.

கடந்த வருடம், பாகிஸ்தானில் தமது உரிமைகளைக் கேட்டுப் போராடிய திருநங்கை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது முதல் திருநங்கைகள் மீதான பாகிஸ்தானியர்களின் பார்வை சற்றே மாறியிருக்கிறது. இதனையடுத்தே இந்த ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் திருநங்கைகளையும் தனியொரு பிரிவாக இணைத்துக்கொள்ள பாகிஸ்தான் அரசு சேர்த்துக்கொண்டது.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ஜனநாயக நீரோட்டத்தில் கலந்துகொள்ளும் முகமாக ஷகீலா என்ற நாற்பது வயதுத் திருநங்கையின் பிறந்த தினத்தை ஆடம்பர ஹோட்டலில் திருநங்கைகள் கொண்டாடினர்.

இந்த விழாவை நடத்த ஹோட்டல் நிர்வாகிகளிடம் அனுமதி பெற மிகுந்த சிரமப்பட்டதாகவும், இனிமேல், பாகிஸ்தானில் ஒவ்வொரு திருநங்கைக்கும் அவர்களுடைய வாழ்நாளில் ஒரு முறையேனும் பிறந்த நாள் விழாவை நடத்துவது என்று தாம் தீர்மானித்திருப்பதாகவும் திருநங்கைகளுக்கான அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த விழாவுக்கு எழுத்து மூலமான எந்தவொரு அனுமதியும் அரசிடமிருந்து பெறப்படாத போதும், பொது மக்கள் தாக்கக் கூடும் என்ற அச்சத்தின் பேரில் பொலிஸார் பாதுகாப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லட்சுமி மேனன் விலகியதால் விஜய் சேதுபதிக்கு ஜோடியான தன்யா..!!
Next post  பேச்சுவார்த்தை எனும் தந்திரோபாயம்..!! (கட்டுரை)