அதிகம் மீன் சாப்பிடுபவர்களா நீங்கள்? இது உங்களுக்கான செய்தி..!!

Read Time:2 Minute, 25 Second

rtrஅதிகரித்து வரும் புவி வெப்பநிலையானது மீன்களில் உள்ள பாதரசத்தின் அளவை, இருக்கும் அளவிலிருந்து ஏழு மடங்கு அதிகரிக்கச் செய்யலாம். என சுவீடன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆராய்ச்சியின் மூலம் புவி வெப்பமயமாதல் கடல் உயிரினங்களில் நச்சுத்தன்மையை அதிகரிப்பதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் அதிகமாக பெய்யும் மழை கடலுக்குள் பல கரிம பொருட்களை கொண்டு சேர்த்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். என சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

குறித்த ஆராய்ச்சி பற்றி சுவிடன் யுமி பல்கலைகழக ஆய்வாளர் டாக்டர். எரிக் பிஜோன் தெரிவித்துள்ளதாவது: அதிக வெப்பவாக்கம் மீன்களிலுள்ள மெர்குரி இரசாயனத்தை அதிகமா உற்பத்தியாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது பாதரசத்தின் மாதிரியாகும் என குறிப்பிட்டுள்ளார்.

உலகில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நச்சு இரசாயனங்களில் ஒன்றாக பாதரசம் கருதப்படுகிறது. இதை உலக சுகாதார நிறுவனமும் தெரிவித்துள்ளது. அதிகளவிலான பாதரசம் உள்ளீர்ப்பானது நரம்பியல் சேதங்களை ஏற்படுத்துவதோடு, குழந்தைகளுக்கு பக்கவாதம் மற்றும் மனநல பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

உலகில் தொழில்துறை புரட்சி ஏற்பட்டதிலிருந்து, சுற்றுச்சூழல்களில் பாதரசத்தின் அளவானது சுமார் 200 இலிருந்து 500 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உலகில் பாதரச உற்பத்தியை கட்டுப்படுத்த 2013 ஆம் ஆண்டு முதல் மினமாட்டா சர்வதேச ஒப்பந்தம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தில் 136 நாடுகள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் கேத்ரீன் தெரசா..!!
Next post ஏமனில் அமெரிக்க ராணுவ படையினரின் தாக்குதலில் 30 அல்-கொய்தா தீவிரவாதிகள் பலி..!!