தல 57 படத்தின் தலைப்பு இதுவா? குழப்பத்தில் ரசிகர்கள்..!!

Read Time:2 Minute, 13 Second

201701291230533985_Thala-57-title-Vivekam-Fans-confused_SECVPFஅஜித் தற்போது நடித்து வரும் ‘தல 57’ படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாத நிலையில், அப்படத்திற்கு இதுதான் தலைப்பு என்று சமூக வலைத்தளத்தில் போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொருவராக புதுபுது வதந்திகளை கிளப்பி வருகின்றனர்.

அஜித் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய ஆங்கிலத்தில் V வரும்படியான படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகியுள்ளதால், அஜித் நடிக்கும் இந்த படத்திற்கும் ஆங்கிலத்தில் V வரும்படியான தலைப்புதான் வைக்கப்படும் என்று ஒரு செய்தி பரவியது.

இதையடுத்து, இப்படத்திற்கு ‘வதம்’ அல்லது ‘விவேகம்’ இந்த தலைப்புகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய படக்குழுவினர் முடிவு செய்ததாக தகவல்கள் வெளியானது. இதில், ‘விவேகம்’ என்ற தலைப்பையே படக்குழுவினர் தங்களின் பரிசீலனையில் முதல் இடத்தில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், வருகிற பிப்ரவரி 2-ந் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக வெளிவந்துள்ள தகவல்கள் அடிப்படையில், இப்படத்தின் தலைப்பு குறித்த வதந்திகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், கருணாகரன், தம்பி ராமையா, விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாய் தயாரித்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருகோணமலை: செல்லாக் காசா? (கட்டுரை)
Next post பெண்களின் நோய்களை குணப்படுத்தும் கசகசா..!!