அம்மா பாடல் புகழ் கவிஞர் அஸ்மின் – தாஜ்நூர் இணையும் ‘கரிச்சான் குருவி’..!!

Read Time:3 Minute, 13 Second

201701301638017961_Amma-song-poet-ashmin-Tajnoor-joint-movie-karichan-kuruvi_SECVPFவானே இடிந்ததம்மா’ என்ற அம்மா இரங்கல் பாடல் மூலம் உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஈழத்து கவிஞர் அஸ்மின். இவர் விஜய் ஆண்டனியின் ‘நான்’ திரைப்படத்தில் ‘தப்பெல்லாம் தப்பேயில்லை’ பாடலை எழுதி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜிப்ரான் இசையில் ‘அமரகாவியம்’ படத்தில் அஸ்மின் எழுதிய ‘தாகம் தீர கானல் நீரை’ பாடலுக்காக 9-ஆவது ‘எடிசன்’ திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டு பாடலாசிரியர் விருதினை பெற்றவர்.

‘காதல்’ சுகுமாரின் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் கடந்த வருடம் வெளிவந்த ‘சும்மாவே ஆடுவோம்’ திரைப்படத்தில் அஸ்மின் எழுதிய ‘முத்து முத்து கருவாயா’ பாடல் அஸ்மினுக்கு மிப்பெரிய வெற்றிப்பாடலாக அமைந்தது. கவிஞர் அஸ்மின் பாடல் எழுதி மிக விரைவில் வெளிவரவுள்ள திரைப்படம்தான் ‘கரிச்சான் குருவி”.

பிரபு தேவா நடித்த ‘ராசையா’, விவேக் நடித்த ‘நான்தான் பாலா’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கண்ணன் ராஜமாணிக்கம்தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். ‘வம்சம்’ ,’எத்தன்’, ‘ஸ்ரோபரி’ போன்ற படங்களுக்கு இசையமைத்த தாஜ்நூர் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இவர் ஆஸ்கார் நாயகனிடம் பல ஆண்டுகள் உதவியாளராக பணிபுரிந்தவர்.

‘இந்த படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ‘ஏஞ் சண்டாளனே’ எனத்தொடங்கும் பாடலை கவிஞர் அஸ்மின் எழுதியுள்ளார். ஏனைய பாடல்களை அமரர் நா.முத்துக்குமார், தனிக்கொடி, தமயந்தி, மீனாட்சி சுந்தரம், கலீல் ஆகியோர் எழுதியுள்ளனர். இதில் அஸ்மின் எழுதிய ‘சண்டாளனே’ பாடல் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பாடலென்பதால் இசை வெளியீட்டுக்கு முன்பாகவே இந்த பாடலினை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர். இந்தப் பாடலை வேல்முருகன் மற்றும் ஆழா ஆகியோர் பாடியுள்ளனர்.

இப்படத்தில் நாயகனாக சந்தோஷ் சரவணன் அறிமுகமாகின்றார்.நாயகியாக ‘டூரிங்ஸ் டாக்கிஷ்’ படத்தில் நடித்த சுனு லட்சுமி நடித்துள்ளார். அவர்களோடு ‘நண்டு’ ஜெகன், கோவை சரளா, செண்ட்டராயன், டி.பி கஜேந்திரன், ஆர்.வி உதயகுமார், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜெரால்ட், என்.இளங்கோ, உமா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீடு மிக விரைவில் நடைபெறவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகின் விசித்திரமான சில விலங்குகள்..!! (வீடியோ)
Next post இந்த ஆரோக்கிய உணவுகளும் முகப்பருவை உண்டாக்கும்..!!