ஹாலிவுட் படத்தில் இடம்பெறும் தமிழ் பாடல்..!!

Read Time:1 Minute, 17 Second

201701301020041416_Tamil-song-in-Hollywood-movie_SECVPFகடந்த 2002-ம் ஆண்டு வெளியான படம் ‘ரெசிடெண்ட் ஈவில்’. அதனைத் தொடர்ந்து ‘ரெசிடெண்ட் ஈவில்’ படத்தின் 5 பாகங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் 6வது பாகம் ‘ரெசிடெண்ட் ஈவில்: கடைசி பாகம்’ வரும் பிப்ரவரி 3-ம் தேதி திரைகளில் வெளியாகிறது. அநியாயத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டம் இந்த பாகத்துடன் முடிவடைகிறது. இப்படத்தை பால் டபிள்யூ.எஸ். ஆன்டர்சன் இயக்கியுள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகை மில்லா ஜோவோவிச் நடிப்பில் ஆக்‌ஷன் ட்ரீட்டாக வெளிவர உள்ள இந்த படத்திற்கு விளம்பர பாடல் ஒன்று தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இந்த பாடலை சுனிதா சாரதி பாடியுள்ளார். சந்தோஷ் தயாநிதி ‘கட்டபாவ காணோம்’ ‘இனிமே இப்படிதான்’ படங்களுக்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அந்த விசயத்தில் புதுமைப் பித்தனாக இருக்கலாமே…!!
Next post தொப்புள் பகுதியில் ஆயில் மசாஜ் செய்வதால் இவ்வளவு நன்மைகள் நடக்குமா?