8 லட்சம் பேரை கவர்ந்த கண்காட்சி..!!

Read Time:9 Minute, 25 Second

0மிகப் பிரம்மாண்டமாக தொடங்கி கடந்த வாரம் முடிவடைந்த டெட் ராய்ட் ஆட்டோமொபைல் கண்காட்சியை 8 லட்சம் பேர் கண்டு களித்துள்ளனர். சர்வதேச அளவில் நடைபெறும் ஆட்டோமொபைல் கண்காட்சிகளில் மிகவும் முக்கியமானதாக இது கருதப் படுகிறது. ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் இக்கண்காட்சி நடத்தப்பட் டாலும் இக்கண்காட்சிக்கான ஆயத்தப் பணிகள் அக்டோபர் மாதத்திலேயே தொடங்கிவிடும்.

இந்தக் கண்காட்சி குறித்த தகவல்களைத் திரட்ட உலகெங்கிலுமிருந்து 5,100 பத்திரிகையாளர்கள் இங்கு திரண்டிருந்தனர். தொழில்துறையைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே 40 ஆயிரமாகும்.

பல்வேறு தரப்பிலிருந்து வந்து குவிந்த மக்களில் இக்கண்காட்சியைக் காண்பதற்கென்று உலகெங்கிலுமிருந்து ஆர்வமுடன் டிக்கெட் வாங்கி பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கை மட்டும் 98 ஆயிரமாகும். இந்தக் கண் காட்சியில் 46 புதிய மாடல் வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

அமெரிக்க கால்பந்து போட்டியைக் காண வரும் பார்வையாளர்களைக் காட்டிலும் இரு மடங்கு பார்வை யாளர்கள் இக்கண்காட்சிக்கு வந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கண்காட்சி மூலம் 45 கோடி டாலர் மதிப்பிலான வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 2 கோடி டாலர் அதிகமாகும்.

போக்குவரத்தில் மையமாக உலக அளவில் டெட்ராய்ட் திகழ்கிறது. இங்கு வந்து பார்வையிட்டோர் ஆட்டோ மொபைல் துறையின் முழுப் பரிமாணத்தையும் உணர முடியும் என்று கண் காட்சி குழு தலைவர் சாம் ஸ்லாட்டர் தெரிவித்துள்ளார். டிரைவர் தேவைப் படாத கார்கள் முதல் நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும் வாகனங்கள் வரை அனைத்தும் இங்கு இடம்பெற்றன. வாடிக்கையாளர்களைக் கவர விற்பனை யகங்களில் எத்தகைய மாற்றங்கள் செய் யப்பட உள்ளன என்பதை விநியோகஸ் தர்களும் காட்சிப்படுத்தியிருந்தனர்.

இந்த கண்காட்சியின் மிக முக்கிய நிகழ்வாக என்ஏஐஏஎஸ் அமைப்பு நடத் திய அறக்கட்டளைக்கு 52 லட்சம் டாலர் திரண்டது. 13 ஆயிரம் பேர் அறக்கட் டளைக்கு நன்கொடை அளித்தனர். அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் தனது பிரபல மாடல்களான ரேஞ்சர் மற்றும் பிரான்கோ மாடல்களை மீண்டும் அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

கொரியாவைச் சேர்ந்த கியா மோட் டார்ஸ் அதிவிரைவு காரை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த ஆண்டு கார் விற்பனையகங்களின் தோற்றத்தைப் போன்று சிமுலேட்டர்கள் உருவாக்கப்பட்டிருந்தன. பெரிய நிறுவனங்கள் அனைத்துமே இத்தகைய சிமுலேட் டர்களை காட்சிப்படுத்தியிருந்தன.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுள்ளதால், தேர்தல் பிரசாரத்தின்போது அவர் தெரிவித் திருந்த கருத்துகள்தான் கண்காட்சியின் மைய விவாதமாக இருந்தன. ஒவ்வொரு கார் தயாரிப்பு நிறுவனங்களும் எந்த அளவுக்கு அமெரிக்காவில் கார்களைத் தயாரிக்கின்றன என்பன உள்ளிட்ட தகவலை பகிர்ந்து கொண்டன.

டொயோடா மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்களுக்கு எல்லை வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் தனது ட்விட்டரில் தெரிவித்திருந்த கருத்து இக்கண்காட்சியில் முக்கிய விவாதப் பொருளாக இருந்தது.

ட்ரம்ப் நடவடிக்கைக்கு பயந்து ஃபோர்டு நிறுவனம் மெக்சிகோவில் 160 கோடி டாலர் முதலீட்டில் தொடங்க விருந்த ஆலை திட்டத்தைக் கைவிடுவ தாக அறிவித்தது. அதேசமயம் அமெரிக் காவில் உள்ள ஆலையை 70 கோடி முதலீட்டில் விரிவுபடுத்தப் போவதாக அறிவித்தது.

சொகுசு கார்கள் தயாரிக்கும் ஜெர்மனி யின் மெர்சிடஸ் பென்ஸ், டெய்ம்லர், ஃபோக்ஸ்வாகன் ஆகிய நிறுவனங்கள் இனி அமெரிக்காவுக்கு வெளியே உள்ள ஆலையில் தயாரிக்கும் கார்களை அமெ ரிக்காவில் விற்பதற்கு கடுமையான இறக்குமதி வரியை செலுத்த வேண்டி யிருக்கும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுவும் கார் உற்பத்தியாளர்கள் மத்தி யில் விவாதப் பொருளாக இருந்தது. இறக்குமதி வரியாக 35 சதவீதத்தை இந் நிறுவனங்கள் செலுத்த வேண்டியிருக் கும். ஜெர்மன் நிறுவனங்கள் ஆண்டு தோறும் 13 லட்சம் வாகனங்களை அமெரிக்காவில் விற்பனை செய்கின்றன.

அமெரிக்காவில்தான் பெரும்பாலான கார்கள் தயாரிப்பதாக ஜெர்மன் ஆட்டோமொபைல் கூட்டமைப்பின் தலைவர் மத்தியாஸ் விஸ்மான் தெரிவித் துள்ளார். மொத்தம் 21 லட்சம் வாகனங் களை அமெரிக்காவில் ஜெர்மன் நிறு வனங்கள் உற்பத்தி செய்கின்றன. இவற்றில் 41 சதவீதம் மட்டுமே அமெரிக்காவில் விற்பனை செய்வதாக வும், எஞ்சியவை ஏற்றுமதி செய்யப் படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜெர்மன் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மூலம் 33 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளன. சப்ளை நிறுவனங்கள் மூலம் 77 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ள தாகவும் அவர் கூறினார்.

பிஎம்டபிள்யூ நிறுவனம் 100 கோடி டாலர் முதலீட்டில் மெக்சிகோவில் ஆலை அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த ஆலை மூலம் 1,500 பேருக்கு வேலை கிடைக்கும். அமெரிக்க வரி விதிப்பு அதிகரித்தாலும் இத்திட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று பிஎம்டபிள்யூ அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு டெட்ராய்ட் ஆட்டோ மொபைல் கண்காட்சி முந்தைய கண் காட்சிகளைக் காட்டிலும் பல விதத்திலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதிக எண்ணிக்கையிலானோர் இக்கண்காட்சியை கண்டு ரசித்துள்ளனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வெளிநாட்டு ஆலை தொடங்கும் திட் டத்தைக் கைவிட்டுள்ளன. அதேசமயம் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ், தனது பேட்டரி காரை சீனாவில் உள்ள ஆலையில் தயாரித்து அமெரிக்காவில் விற்கப் போவதாக அறிவித்துள்ளது. பல முன்னேறிய தொழில்நுட்பத்திலான வாகனங்களும் இக்கண்காட்சியில் இடம்பெற்றன.

ஆட்டோமொபைல் துறையின் தாயகம் டெட்ராய்ட் என்றால் அது மிகையல்ல. அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் கண்காட்சி, ஆட்டோ மொபைல் துறை கண்காட்சிகளின் நாயகன் என்றால் அது பொறுத்த மாகத்தானிருக்கும். அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுள்ளதால், தேர்தல் பிரசாரத்தின்போது அவர் தெரிவித்திருந்த கருத்துகள்தான் கண்காட்சியின் மைய விவாதமாக இருந்தன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிழக்கு பல்கலைக்கழக முற்றுகைப் போராட்டம் பட்டக் கல்விப் பாரம்பரியத்துக்கு கறுப்புப்புள்ளி..!! (கட்டுரை)
Next post கர்ப்பிணிகளுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர்..!!