முதுமையில் கூன் விழுவதற்கு காரணம் என்ன?..!!

Read Time:2 Minute, 27 Second

201701311014127028_What-is-the-cause-of-aging-kyphotic-spine_SECVPFமுதுமை வயதில் கூன் விழுதலுக்கு பல காரணங்கள் உள்ளது. அதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

நமக்கு முதுமையில் கூன் ஏற்படுவதற்கு, முதலில் நமது கழுத்துப் பகுதியில் உள்ள எலும்புகள் பழுதுபடுவதே காரணமாகும்.நாம் தலையில் அதிக பளு தூக்குவது, கவிழ்ந்த நிலையில் நீண்ட நேரம் வேலை செய்வது இது போன்ற காரணங்களினால் தான் கழுத்து எலும்புகள் பாதிக்கப்பட்டு,

முதுகு எலும்பு தேய்மானம் அடைந்து கூன் விழும் தோற்றத்தை ஏற்படுத்துகிறது. நமது உடம்பில் உள்ள வம்சி இடைத்தட்டானது அடிபடும் போதும், அல்லது பல காரணங்களினால் இயல்பான இடத்திலிருந்து விலகி விடுகிறது.

மேலும் இதனால் மேலும் கீழும் இருக்கும் வம்சிகள் நேரடியாக ஒன்றுடன் ஒன்று உராய்வதால், அது நாளடைவில் எலும்புத் தேய்மானம் ஏற்பட்டு முதுகெலும்பு அமைப்பு இயல்பான நிலையிலிருந்து விலகி சற்று முன்னோக்கி சாய்ந்து கூன் போன்ற தோற்றத்தைத் தருகிறது.

நமது முதுகெலும்புகள் பழுதடைவதற்கான காரணங்கள் என்ன?

இயந்திரங்களில் அதிக நேரம் பணியாற்றி, அதிகப்படியான பளு தூக்குதல்.

தினமும் அதிகமாக இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை உபயோகிப்பது.

நமக்கு பொருத்தம் இல்லாத இருக்கைகளில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை மற்றும் பயணம் செய்தல்.

புகைப்பழக்கம், மது, போதைப் பழக்கம் அதிகமாக இருப்பதால், மன உளைச்சலுடன் நீண்ட நேரம் வேலை செய்வதல்.

மிகுந்த கோபம், தாழ்வு மனப்பான்மை மற்றும் விபத்தால் முதுகுப் பகுதியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருத்தல்.

இடுப்பு வம்சிகளில் ஒரு வம்சிக்கும் மற்றொரு வம்சிக்கும் இடையில் இருக்கும் இடைத்தட்டு பிறழ்ச்சி அடைதல்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காஷ்மீரைச் சேர்ந்த 2 விளையாட்டு வீரர்களுக்கு அமெரிக்க விசா மறுப்பு..!!
Next post 32 வயது பெண்ணின் மேல் 26 வயது இளைஞருக்கு ஏற்பட்ட கள்ளக்காதல்..!!