By 4 February 2017 0 Comments

“காகிதப் பூக்கள்”.. நெடுந்தொடர் – அத்தியாயம் 2

pic3544-29-1485670767லதா சரவணன் டிரைவர் அப்படி ஒன்றும் விவரம் அற்றவர் அல்ல.. ஐந்து நிமிடம் லேட்டானாலும் உடனே பேசி காரணம் சொல்பவர். வித்யா சொல்லியதுபோல அவரைத் தொடர்பு கொண்டால் மணி அடித்துக்கொண்டேதான் இருந்தது. இனி தாமதிக்கக்கூடாது. காரைக் கிளப்பினான். “ஜீவனா அவன் 5 மணிக்கே போயிட்டானே ? ” “மேடம் அவன் இன்னமும் வீட்டுக்கு போகலை ? ” “தெரியலையே ஸார் … இன்று எங்கோ வெளியே போவதாய் ஜீவன் சொல்லியிருந்தான்ய உங்க டிரைவர் அஞ்சு நிமிடம் தாமதமின்னு ஓரே திட்டு வேறு … !”

“சாரி மேடம் ஒருவேளை வண்டியில் ஏதாவது பிரச்சனை இருக்கலாம் நான் வழியில் பார்க்கிறேன்..” “கவின் ஸார்… தகவல் தெரிந்தால் உடனே போன் பண்ணுங்கள்.” தலையசைத்துவிட்டு, கடவுளே?! மீண்டும் டிரைவர் எண்ணிற்கு தொடர்பு கொள்ள அது ரிங் போய்க் கொண்டே இருந்தது. டிரைவரை நம்பி ஜீவனை அனுப்பியது தவறோயென்று தோன்ற, வழியெங்கும் பார்வையைத் திருப்பினான். வண்டி எங்காவது பிரேன் டவுன் ஆகி விட்டதோயெனும் நினைப்பில்…!

ஆனால் வண்டி எங்கும் தட்டுப்படாமல் போகவே பயம் மனதிற்குள் மண்டியது..! வீட்டை நெருங்க நெருங்க வித்யாவை எப்படி சமாளிக்கப் போகிறோம்.? அவன் எதிர்பார்த்தபடியே, வித்யா தொய்ந்து போய்தான் இருந்தாள். அழகிய முகத்தில் கவலைரேகைகள் கூடவே கண்ணீர் கோடுகள். கணவனைக் கண்டதும் கதறியபடி வந்தாள்.. “என்னங்க…..” “பயப்படாதே… வித்யா…. ஜீவனுக்கு ஒண்ணும் ஆகியிருக்காது.?!” “அப்படின்னா…..

“தெரியலை…. இன்னும் டிரைவரிடம் இருந்து தகவல் இல்லை… “நேரம் ஆக ஆக கவினுக்கே உள்ளுக்குள் பயம் அதிகமாகியது.. என்ன செய்யலாம்? எனும் போதே போலீஸ் துறையில் ஏ,ஸியாக இருக்கும் தன் நண்பன் ஈஸ்வரின் கவனம் வர உடனே அவனைத் தொடர்பு கொண்டான் கவின்,

“ஹலோ ஈஸ்வர்…”.

“சொல்லு கவின்! என்ன விஷயம் ? அண்ணி ஜீவனெல்லாம் நலமா?!” “ஈஸ்வர் நீ கொஞ்சம் வீட்டுக்கு வரமுடியுமா ?” “இப்போ நான் டியூட்டியில் இருக்கேனே ,,,,! ஏதாவது பிரச்சனையா ?” “ஆமாம். ஜீவன் டிராயிங் கிளாஸ் போனவன் ஐந்து மணிக்கு வரவேண்டியது, இன்னமும் வீடு வந்து சேரலை?! டிரைவரோட போனும் எடுக்கமாட்டேங்குது.

பயமா இருக்கு “ஈஸ்வர். “பயப்படாதே கவின், ” தைரியமா இரு நான் உடனே வர்றேன், அண்ணியையும் சமாதானப்படுத்து…. டிராயிங் சென்டர்ல கேட்டியா ?” “நேரிலேயே போய் பார்த்தேன் டிரைவர்தான் கூப்பிட்டுப்போனதா சொல்றாங்க!” “சரி போனை வை. நான் வர்றேன். இருக்கையில் இருந்து நகர்ந்தபடியே, துரை நான் கொஞ்சம் வெளியே போகவேண்டி இருக்கு… பார்த்துக்கோங்க…” என்று டேபிளின் மேல் இருந்த என்பீல்ட் சாவியை எடுத்துக்கொண்டு பறந்தான் ஈஸ்வர்.

கவின் அலைபேசி ஒலிக்கத் துவங்கியது.. “ஹலோ….” எதிர்முனையில் கரகரப்பாய் ஒரு ஆண் குரல்.. “ஹலோ…. பேசறது ஜீவனோட அப்பாவா ?” “ஆமாம் நீங்க யாரு?” “அவரசப்படாதே கவின் நான் யாருன்னுகிறதை தெரிஞ்சிகிட்டு நீ என்ன பண்ணப்போறே சொல்றதை மட்டும் கேளு. உன் பிள்ளை இப்போ என்கிட்டேதான் இருக்கான்.

அவனை பத்திரமா சேர்க்கணுமின்னா 10லட்ச ரூபாய் தரணும்.” “நீ யாரா இருந்தாலும், பணம் சம்பாதிக்க பச்சைப் பிள்ளைகளை கடத்தி பெற்றோரோட வயிற்றெரிச்சலை கொட்டிக்காதே ?!” “உன் அறிவுரையை விடு, பணம் எப்போ எங்கேன்ன அப்புறமா சொல்றேன்.’ இணைப்பு துண்டிக்கப்பட வித்யா அலறினாள். ‘நான் அப்பவே சந்தேகப்பட்டேன்.” வித்யா அரற்றியபடி இருக்கும் போதே ஈஸ்வர் புயலாய் நுழைந்தான்.. ‘என்னாச்சு…. கவின்…. டிரைவர் நம்பிக்கையானவன்தானே ?!” “அப்படித்தான் பழகினான்.. அண்ணா இப்போ பாருங்க? பாவிப்பயல் என் பிள்ளையைப் போய்…..?!

இப்போதான் யாரோ போன் பண்ணி பத்துலட்ச ரூபாய் பணம் கேட்டாங்க…..!” ‘அழாதீங்க அண்ணி! கண்டுபிடிச்சிடலாம்,நீங்க போய் டீ கொண்டு வாங்க..எனக்கு கொஞ்சம் யோசிக்க அவகாசம் தாங்க அதுவரையில் அவன் ஸ்கூல் போயிருக்கான்னு நினைச்சிக்கோங்க”. வித்யா அழுதபடியே,,, “ஜீவன் பசி தாங்கிட மாட்டான் . ஏதாவது சாப்பிடக் கொடுத்தாங்களான்னு கூட தெரியலையே….” “பணம் கேட்டு இருக்காங்க…

அது கிடைக்கும் வரையில் அவனுக்கு எந்த பாதிப்பும் இருக்காது…..! பளீஸ் நீங்க அழுகையை நிறுத்தினாத்தான் மேற்கொண்டு என்ன செய்வதுன்னு யோசிக்க முடியும். அழுவதால் எந்தபயனும் இல்லை. போங்க.”. அவள் விசும்பியபடியே நகர, நண்பணின் கரங்களைப் பற்றிக் கொண்டான் கவின்.

(தொடரும்)Post a Comment

Protected by WP Anti Spam