By 8 February 2017 0 Comments

மூட்டுகளின் வீக்கத்தை தடுக்கும் வழிமுறைகள்..!!

201702070826592825_Means-for-preventing-inflammation-of-the-joints_SECVPFவயது கூடும் பொழுது நம் உடல் சீராக இருப்பதில்லை. தசைகள் உறுதியாக இருப்பதில்லை. தோல் துவளுகின்றது. மூட்டுகள் நன்கு மடங்குவதில்லை. நாகரீக உலகின் உணவு உடலில் வீக்கத்தினை தரும் உணவாகவே இருப்பதால் நாம் அதிக பாதிப்பினை அனுபவிக்கின்றோம்.

மனதினை விட உடலுக்குத்தான் வேகமாய் வயது கூடுகின்றது. அன்றாடம் நாம் ஓடும் ஓட்டமான பரபரப்பான வாழ்க்கை மூட்டுகளை சீக்கிரமாகவே பாதிக்கச் செய்கின்றது. இதனால் நிரந்தர வலி, வீக்கம், அசைவுகளில் கடினம் ஏற்படுகின்றது.

வீக்கம் என்பது என்ன? உடலிலுள்ள வெள்ளை அணுக்கள் ஒருவித பொருளினை உற்பத்தி செய்யும். எதற்கு நமக்கு ஏதேனும் காயம், அடி ஏற்பட்டிருந்தால் அதனால் ஏற்படும் கிருமி மற்றும் வைரஸ் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாக்கவே இவ்வாறு செய்யும். நீண்ட கால வீக்கம் ஏன் ஏற்படுகின்றது. இந்த எதிர்ப்பு சக்தி நம்மிடம் இல்லாத பொழுது தொடர் பாதிப்பு ஏற்படுகின்றது. நமது உடலே, நமது திசுக்களை தாக்கும் நிலை ஏற்படுகிறது. உதாரணமாக மூட்டு வீக்கங்கள் கீழ்கண்ட அறிகுறிகளுடன் காணப்படலாம்.

* சிவந்து இருத்தல்
* வெதுவெதுப்பாக இருத்தல்
* வலி
* அசைக்க முடியாத பிடிப்பு
* செயல்பட இயலாமை.

ஆரோக்யமான உடலில் ஏற்படும் பாதிப்பில் வெள்ளை அணுக்களின் வேலை காரணமாக அதிக ரத்தப்பாதிப்பு ஏற்படும் இடத்திற்கு சென்று பாதிப்பினை நீக்கும். ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது பாதிப்பு கூடும். ஆக வீக்கம் என்பது சீராகும் முறையே என்றாலும், அதிக தொடர்வீக்கம் தீமையினை விளைவிக்கும்.

வீக்கம் ஏற்படுவதற்கான மற்ற காரணங்கள் :

* இருதய பாதிப்பு
* நீரிழிவு பிரிவு 2
* மனச்சோர்வு
* நுரையீரல் பாதிப்பு
* எலும்புகள் பாதிப்பு
* புற்று நோய்
* கட்டுக்கடங்கா கோபம்
* தூக்கமின்மை
* மன உளைச்சல்
* நீர்சத்து போதாமை
* புகை பிடித்தல்
* அதிக ஆல்கஹால்
* குடலில் பாக்டீரியா சீரின்மை
என, கூறிக் கொண்டு செல்லலாம்.

ஆனால் இதனை எளிதாய் சரி செய்வது எப்படி?

வீக்கத்தினை நீக்கும் உணவுகளை உட்கொண்டும், அதிகரிக்கும் உணவுகளை தவிர்த்தும் வந்தாலே எளிதில் சரி செய்யலாம்.

சர்க்கரை: அதிக சர்க்கரை உணவு முதலில் பல் சொத்தையினை ஏற்படுத்தும், உடல் பருமனை கூட்டும், நீரிழிவு பிரிவு இரண்டினை எளிதாய் ஏற்படுத்தும். கெட்ட பாக்டீரியாக்கள், புற்று நோய் செல்களை கூட்டும், நோய் எதிர்ப்பு சக்தியினை குறைக்கும். அமிலத்தன்மையினை உண்டாக்குவதன் மூலம் வீக்கத்தினை அதிகரிக்கச் செய்யும்.

உங்கள் உணவுகளில் எது எதில் அதிக சர்க்கரை உள்ளது என்பதனை அறிந்து தவிர்த்து விடுங்கள். இயற்கையான பழங்களை உண்ணும் பழக்கத்தினை உருவாக்கிக் கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் அதிக சர்க்கரை இருக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே எதனையும் படித்து அறிந்து பின் பயன்படுத்துங்கள்.

* நாம் சமைக்கும் எண்ணெயில் அதிகம் ஓமேகா 6-ல் இருந்து ஓமேகா 3 குறைவாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிக ஓமேகா உடலின் வீக்கங்களை கூட்டக் கூடியது. எனவே உங்கள் எண்ணெயினைப் பற்றி நன்கு படித்து அறியுங்கள். அளவான முறையில் உபயோகிக்க தேங்காய் எண்ணெய் மிகவும் சிறந்தது. அதிகம் வறுத்த, பொரித்த உணவுகளும், பேக்கரி உணவுகளும் கொழுப்பினை அதிகரிக்கச் செய்யும் என்பதனை மறவாதீர்கள்.

* பால் அநேகருக்கு அலர்ஜியாக இருக்கலாம். இதனால் ஏற்படும் பாதிப்பால் வீக்கம், வயிறு பாதிப்பு, செரிமானமின்மை வயிற்றுப் போக்கு. சரும பாதிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் என ஏற்படலாம். வெண்ணெய் சீஸ் இவற்றினைப் போலப் பிரெட், பிஸ்கட் இவற்றிலும் பாலின் சேர்க்கை இருக்கக் கூடும். அலர்ஜி, பாதிப்பு, தரும் வீக்கத்தினை தவிர்க்க அலர்ஜி உடையோர் இப்பொருட்களை தவிர்ப்பது நல்லது.

* பதப்படுத்தப்பட்ட அசைவ உணவுகளில் அதிக உப்பு மற்றும் சில தேவையற்ற பொருட்கள் சேர்க்கப்படலாம். எனவே அவ்வப்போது பெறும் ப்ரெஷ் உணவுகளை பயன்படுத்துங்கள்.

* ஆல்கஹால் பாதிப்பினைப் பற்றி கூறிக் கொண்டே செல்லலாம். இங்கு உணவுப் பாதையில் அது ஏற்படுத்தும் நிரந்தர வீக்கத்தினைப் பற்றி தான் குறிப்பிட வேண்டும். தொடர்ந்து இருப்பதால் புற்று நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அடியோடு தவிர்ப்பதே நல்லது.

* நார்சத்து நீங்கிய தானிய உணவானது புற்று நோய், இருதய பாதிப்பு, நீரிழிவு இவற்றினை கொண்டு வந்து விடும். பிஸ்கட், பாஸ்தா, கேக்குகள், வெள்ளை பிரெட் இவற்றினை மிதமாக உண்பதே நல்லது.

* மிகவும் சுத்திகரிக்கப்பட்ட உப்பு, ரத்த கொதிப்பு, சிறுநீரக பாதிப்பு, எலும்பு தேய்மானம், நீரினை உடம்பில் நிறுத்தல் என எண்ணற்ற பாதிப்புகளை கொண்டு வந்துவிடும் சாதாரண கல் உப்பு மிகவும் சிறந்தது.

மேற்கூறியவற்றினை அதாவது வீக்கம் அதனை இயற்கை முறையில் எதிர் கொள்ளுதல், இவற்றினைப் பற்றி எழுதுவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கின்றது. சில நாட்களுக்கு முன்னால் பலவிதமான உடல் நல பாதிப்புகளுடன் ஒரு நோயாளியை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. அவரை பரிசோதித்த பொழுது அதிர்ச்சியான உண்மை வெளியானது. அவராகவே சில காலமாக மூட்டு வலி வீக்கங்களுக்கு ‘ஸ்டீராய்ட்’ மாத்திரைகளை எப்படியோ பெற்று சாப்பிட்டு வந்துள்ளார். இதனால் மிக அதிகமான பாதிப்புகளை அடைந்துள்ளார். ஆக இப்படி தானாகவே எதனையும் மிக அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் அசட்டு தைரியசாலிகளை திருத்தவே இக்கட்டுரை எழுதப்படுகின்றது.

ப்ரெட்னசோன் எனப்படும் கார்டிகோ ஸ்டீராய்ட் மருந்து தனியாத வீக்கங்கள் (உ.ம்) மூட்டுவலி, மூச்சு பிரச்சினை, சில ரத்த பாதிப்புகளுக்கு அவசர சிகிச்சையாக குறைந்த அளவு மருத்துவ கண்காணிப்பில் அளிக்கப்படுகின்றது. இவை மனிதன் தயாரிப்பு ஹார்மோகன், அலர்ஜி, சருமபாதிப்பு, புற்றுநோய், கண் பிரச்சினை இவைகளுக்கு பூச்சு மருந்தாகவும், உள்ளுக்கும் அளிக்கப்படுகின்றது. ஆனால் அவை கடுமையான மருத்துவ கண்காணிப்பில் மட்டுமே தரப்படும். ஏனெனில் இதனை அதிகமாக எடுத்துக் கொண்டால்

* செயல்திறன் முறையற்று இருக்கும்.
* தைராய்டு பாதிக்கப்படும்.
* ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும்.
* எலும்பின் அடர்த்தி குறையும்.
* தூக்கமின்மை ஏற்படும்.
* தசைகளின் அளவு குறையும்
* ரத்த அழுத்தம் கூடும்.
* நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
* புண் எளிதில் ஆறாது.

* பொதுவில் மாத்திரை நிறுத்தியதும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் மறையும். ஆனால் சில சமயங்களில் பாதிப்பு நீடிக்கும்.
மேலும் இம்மாத்திரையின் பக்க விளைவுகளாக

* காச நோய் பாதிப்பு மீண்டும் வரலாம்.
* கிருமி, வைரஸ் தாக்குதல் அதிகமாய் ஏற்படலாம்.
* ப்ளூ, சளி தொல்லை ஏற்படலாம்.
* உடலில் நீர் தங்குதல்
* அடிக்கடி சிறுநீர் செல்லும்.
* எலும்பின் பலமின்மை காரணமாக
* சுரப்பிகள் முறையாய் வேலை செய்யாது.
* தோல் மெலிதாகும்.
* பருக்கள் அதிகமாகும்.
* மனநிலை சரியிராது.
* கல்லீரல் பாதிக்கப்படும்.
* மூச்சுத் திணறல் ஏற்படலாம்.

சிலருக்கு அவசியம் காரணமாக ஸ்ட்ராய் மாத்திரைகளை தொடர்ந்து மருத்துவர்கள் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் பொழுது அவர்கள் இம்மாத்திரை எடுத்துக் கொள்கிறேன் என்ற குறிப்பினை பாக்கெட்டில் வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

அன்னாசி பழம், வைட்டமின் சி, ஒமேகா 3, மஞ்சள், பூண்டு இவைகளை பயன்படுத்துவது இயற்கையான வீக்கம் குறைக்கும் முறை என்பதனை அறிவோமாக.
சில குறிப்புகள்

பல மருத்துவ கண்டு பிடிப்புகளையும், முன்னேற்றத்தினையும் பற்றி நாம் பெருமைபட்டாலும் பல நல்ல விஷயங்களை நம் முன்னோர் நமக்கு கற்றுக் கொடுத்ததை நாம் மறந்து விட்டதும் தவறே என்று சொல்ல வேண்டும்.

* பிளாஸ்டிக் டப்பாக்கள், டம்ளர்கள் பயன்படுத்தாதீர்கள். இதிலுள்ள கெமிக்கல் நாளமில்லா சுரப்பிகளை பாதிக்கக் கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன. கண்ணாடி டம்ளர், பீங்கான், எவர்சில்வர் இவற்றினை பயன்படுத்தலாம். மண் குடுவைகள் மிகச் சிறந்தது.

* அறையை நல்ல வாசத்துடன் மாற்ற கண்டிப்பாய் ரசாயன பொருட்களை பயன்படுத்தாதீர்கள். சாம்பிராணி மிகச் சிறந்தது.
* மலர் கிங் சோடா, வினிகர் இவற்றினை பயன்படுத்தலாம். சென்ட்டின் ரசாயனம் மூச்சின் மூலம் உங்கள் ரத்தத்தில் கலக்கும் வாய்ப்பு உள்ளதாம்.
* இதே போலதான் தன் வாசனை சென்ட்டும், அதற்கு பதிலாக இயற்கை வாசனை திரவியங்களை பயன்படுத்துங்கள்.

* சோப், ஷம்பூ இவற்றினை பொறுத்தவரை காதி பொருட்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.
* செயற்கை முக அலங்காரங்களை முடிந்த வரை தவிருங்கள். மஞ்சள், இயற்கை கண்மை இவற்றினை பழக்கத்திற்குக் கொண்டு வாருங்கள்.
* வியர்வை தடுக்கும் ‘ஸ்ட்ரே’ தவிருங்கள். பேக்கிங் சோடா, மஞ்சள் இவை உங்களை துர்நாற்றமின்றி வைக்கும்.

* மட்பாண்டங்களிலோ, இரும்பு பாத்திரங்களில் சமைப்பதே சிறந்தது.
* பல தரம் குறைந்த உதட்டு சாயங்களில் சில உடல் பாதிக்கும் ரசாயனங்கள் கலந்திருப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
* தரமற்ற பயன்படுத்தும் பொருட்களின் மெர்குரி கலப்படம் இருந்தால் அது மூளையினையே பாதிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.Post a Comment

Protected by WP Anti Spam