விரைவில் பாத வெடிப்பை மறையச் செய்யும் தேன் க்ரீம் எப்படி செய்வது என தெரியுமா..!!

Read Time:2 Minute, 27 Second

imagesபாதவெடிப்பு அதிக வலியை கொடுக்கும். சூப்பரான உருவத்தையும் சுமாராக காண்பிக்கும். அதோடு ஆரோக்கியமற்றதும் கூட. என்ன செய்தாலும் திரும்ப வருகிறதே என கவலையாக இருக்கிறதா? நீங்கள் கேள்விப்படாத இந்த குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்களேன். இதோ உங்களுக்கான எளிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. முயன்று பாருங்கள்.

பாத வெடிப்புகளுக்கான தேன் க்ரீம்

தேவையானவை : தேன் – 1 கப் பால் – 1 ஸ்பூன் ஆரஞ்சு சாறு – 2 ஸ்பூன் பாத வெடிப்புகளுக்கான தேன் க்ரீம் தேனை லேசாக சூடுபடுத்துங்கள். பின்னர் அதில் பால் மற்றும் ஆரஞ்சு சாறை கலக்கவும். பாதம் மியக்வும் கடினமாக இருந்தால் ஆரஞ்சு சாறை அதிகபப்டுத்திக் கொள்ளவும். பின்னர் இதனை தினமும் இரவில் பாதங்களில் பூசிக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால் வெடிப்பு மறைந்து மென்மையான பாதம் கிடைக்கும்.

பயிற்றம் மாவு- வேப்பிலை கலவை :

தேவையானவை : எலுமிச்சை சாறு பயித்தம் பருப்பு மாவு வேப்பிலை மஞ்சள்
பயிற்றம் மாவு- வேப்பிலை கலவை : வேப்பிலையை அரைத்து அதனுடம் பயித்தப் பருப்பு பொடி, மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறை கலந்து தினமும் பாதங்களில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தொடர்ந்து செய்தால் சுருக்கங்களின்றி , வெடிப்பு மறைந்து பாதம் பளபளக்கும்.

ஆப்பிள் சைடர் வினிகர் : கால் பக்கெட் வெதுவெதுப்பான நீரில் 2 கப் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து அதில் கால்களை அமிழுத்துங்கள். இதிலுள்ள அமிலத்தன்மை பாதத்திலுள்ள கடினத்தன்மையை அகற்றி மென்மையாக்கிவிடும். வெடிப்பும் வேகமாக மறைந்து விடும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொதுப் பூங்காவில் அத்துமீறிய காதலர்களுக்கு நடந்த கொடுமை..!! அதிர்ச்சி வீடியோ
Next post குளிக்கும் போது மட்டும் நமக்கு அப்படி ஒரு எண்ண‍ம் தோன்றுவது ஏன்?..!!