அழகான சருமத்துக்கு அரோமா ஆயில்..!!

Read Time:3 Minute, 3 Second

201702081209220193_aroma-Oil-give-beautiful-skin_SECVPFஅரோமா ஆயில் என்பது நறுமண எண்ணெய்களைக் குறிக்கும். இது வாசம்மிக்க மலர்கள் மற்றும் தாவரங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. இது, மெடிக்கல் ஷாப், நாட்டு மருந்துக் கடை மற்றும் டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும். ‘‘சருமத்தை மெருகேற்ற பார்லரைவிட கூடுதல் பலன் கொடுக்கக்கூடியது, அரோமா ஆயில்!’’

தினமும் முகத்தைக் கழுவும்போது, சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் சிறிதளவு எடுத்து நுரை வரும் அளவுக்கு கைகளில் தேய்த்துக்கொண்டதும் அந்த நுரையில் லெமன் கிராஸ் ஆயில் இரண்டு சொட்டு விட்டு முகத்தைக் கழுவவும்.

பலன்: சரும துவாரங்களில் அடைந்துள்ள அழுக்குகள் வெளியேறுவதுடன், அரோமா ஆயிலின் வாசனையானது, சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும்.

ஒரு பாத்திரத்தில் நீரெடுத்து அதில் ஜெரேனியம் ஆயில் (geranium oil), லாவெண்டர் ஆயில், யலாங் யலாங் ஆயில் (ylang ylang oil) தலா இரண்டு சொட்டுகள் விட்டு, மூடிக் கொதிக்க விடவும். கொதித்த பின் நீராவி பிடிக்கவும்.

பலன்: முகத்தின் இறந்த செல்களை நீக்குவதுடன், சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்க உதவும்.

பொதுவாக பொலிவிழந்த சருமத்தை உடனடியாகப் பளிச்சென காட்டவும், அந்தப் பொலிவு அதிகபட்சம் மூன்று நாட்கள் நிலைக்கவும் ஃபேஸ்பேக் உதவி செய்யும். ஆனால் கரும்புள்ளி, பரு, மங்கு போன்ற சருமத்தின் இரண்டாவது அடுக்கின் பிரச்சனைகளையும், சுருக்கம், கோடுகள், வயதான தோற்றம், சருமத் தளர்வு போன்ற சருமத்தின் மூன்றாவது அடுக்கின் பிரச்சனைகளையும் சரிசெய்வது, அரோமா ஆயிலின் தனிச்சிறப்பு.

இதற்கு, லாவெண்டர் ஆயில், லைம் ஆயில், பச்சோலி ஆயில், சீடர் வுட் ஆயில், யலாங் யலாங் ஆயில் இவற்றில் ஏதாவது இரண்டு ஆயில்களில் தலா இரண்டு சொட்டுகளை, ஃபேஸ்பேக் போடும் முன் அதில் கலந்து முகத்துக்கு அப்ளை செய்யவும்.

பலன்: அரோமா ஆயிலின் மூலக்கூறுகள் சருமத்தின் துவாரங்களைவிட மிகச்சிறியது. அதனால் ஃபேஸ்பேக் போட்ட 2 முதல் 20 விநாடிகளுக்குள் இந்த ஆயில் சருமத்தின் மூன்றாவது அடுக்குவரை ஊடுருவி சருமப் பிரச்சனைகளைத் தீர்க்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனுசுடன் டூயட் பாடி நடிக்க ஆசை: மிஷ்டி..!!
Next post ஓபிஎஸ் vs சசிகலா: முதல்வர் சீட் யாருக்கு …. பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்?