லெபனானில் 15 வருடங்களாக பல்வேறு சித்திரவதைக்கு உள்ளான இலங்கை பெண் – கண்ணீருடன் அடைக்கலம் கோருகிறார்..!! (வீடியோ)

Read Time:3 Minute, 18 Second

14-1487075503-disha2லெபனானில் 15 வருடங்களாக பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ள இலங்கை பணி பெண்ணொருவர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அசலக – வரகொல பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு பல வருடங்களாக துன்பங்களை அனுபவித்து வருகிறார்.

தமது குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக கடந்த 2002 ஆம் ஆண்டு பணிபெண்ணாக லெபனான் சென்றுள்ளார்.

வெளிநாடு சென்று இரண்டு வருடங்கள் தனது பெற்றோருடன் தொடர்பு கொண்டிருந்தார்.

பின்னர் 13 வருடங்களாக அவர் குடும்பாத்தாருடன் எந்தவித தொடர்பும் இன்றி இருந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பலமுறை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறித்த பெண்ணின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் குறித்த பெண் தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.

19 வயதில் வெளிநாடு சென்றுள்ள குறித்த பெண் தற்போது 34 வயதான நடுத்தர வயது பெண்ணாக உள்ளார்.

குறித்த பெண் தனது நிலையை காணொளி பதிவின் ஊடாக இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“ஒன்றை வருடகங்களாக நான் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் இருந்தேன்.

என்னை வீட்டு வேலைக்கு அந் நிறுவனம் அமர்த்தி பணம் பெற்று கொண்டது.

இதுவரை ஒரு சதமும் கொடுக்கவில்லை. கொடூரமாக தாக்கினர்.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினர்.

பல்வேறு சித்திரவதைக்கு உள்ளாக்கின்றனர்.

பின்னர் ஒப்பந்த அடிப்படையில் ஒரு வீட்டுக் வேலைக்கு அமர்த்தினர்.

அங்கு 4 வருடங்கள் இருந்தேன். அங்கும் என்னை கொடூரமாக தாக்கினர்.

பணம் கேட்டால், நீ வீட்டில் உள்ள பொருட்களை திருடி வெளிநபர்களுக்கு வழங்கினாய் என கூறுகின்றனர்.

நான்கு வருடங்களுக்கு பின்னர் நான் நாட்டுக்கு செல்ல வேண்டும் என கூறினேன், அப்போதும் என்னை கொடூரமாக தாக்கினர்.

நான் 15 வருடங்களாக அப்பாவிடம் கதைக்கவில்லை.

என்னிடம் கடவுச்சீட்டும் இல்லை.

நான் இலங்கைக்கு வருவதற்கு பணமும் இல்லை.

எனக்கு சிறுநீரக நோயும் உண்டு.

என்னை விரைவாக இலங்கைக்கு கொண்வர முயற்சிக்கவும்.

இல்லை என்றால் எனக்கு ஏதாவது நேரக்கூடும்” என அந்த பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நைட்டியா இது…?! ஆச்சர்யப்படுத்துகிறார்கள் மாணவிகள்..!!
Next post காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..!!