அமெரிக்காவில் விமானம் நொறுங்கியது; 7 பேர் பலி

Read Time:1 Minute, 57 Second

usa-flag.gifஅமெரிக்காவில் பயணிகள் விமானத்தை தீவிரவாதிகள் நூதன முறைகளை கையாண்டு தகர்க்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் அங்கு பீதி நிலவு கிறது. விமானங்கள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப் படுகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் பயணிகள் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. இதில் 49 பேர் பலியானார்கள். இதில் தீவிரவாதிகள் சதி திட்டம் இருக்கலாம் என்று கருதப் பட்டது. ஆனால் தவறான ஓடுபாதையில் சென்றதால் தான் விபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே மேலும் ஒரு விமானம் விபத்தில் சிக்கி இருக்கிறது. குட்டி ரக விமானம் ஒன்று டெக்சாஸ் நகரில் இருந்து கெண்டகி நோக்கி சென்றது. இடையில் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் 7 பயணிகள் இருந்தனர். அனை வரும் உயிர் இழந்தனர். இந்த விமானம் விபத்துக் குள்ளானதற்கு காரணம் என்ன வென்று தெரியவில்லை. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

இன்னொரு விமானத்துக்கு மிரட்டல் வந்ததை அடுத்து அவசரமாக தரை இறக்கப் பட்டது. பிலடெல்பியா நகருக்கு 56 பயணிகளுடன் விமானம் சென்றது. இந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து இடையிலேயே பிரிஸ்டால் நகரில் தரை இறக்கப்பட்டது. பயணிகள் அனைவரையும் இறக்கி விட்டு விமானத்துக்குள் சோதனை நடத்தினார்கள். மர்ம பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விடுதலைப்புலிகளுக்காக நீர்மூழ்கி கப்பல் வாங்கமுயன்றவர் கைது
Next post வைகோவை, கைது செய்ய வேண்டும்: மதுரையில் சுப்பிரமணியசாமி பேட்டி