By 19 February 2017 0 Comments

எலும்புகளைக் காக்கும் உணவுகள்..!!

201702180821243722_Foods-that-protect-bones_SECVPFநம் உடல் உறுதியின் அடிப்படையாக உள்ள எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு கால்சிய சத்து மிகவும் முக்கியமானது.

கால்சியசத்து குறையும்போது, எலும்புகள் பலவீனம் அடையும். ரத்த செல்கள் உருவாவதில் பிரச்சினை, மூட்டுவலி போன்றவை உண்டாகும்.

நமக்கு கால்சிய சத்துகளை வழங்கும் உணவுகளைப் பற்றிப் பார்ப்போம்…

* பாலில் கால்சிய சத்து அதிகம் உள்ளது. பால் குடிப்பது சிலருக்குப் பிடிக்காவிட்டால், தயிரை அதிகமாக தங்களின் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் பாலில் உள்ளதைப் போல தயிரிலும் கால்சியம் அதிகமாக உள்ளது.

* கடல் உணவுகளில், இறாலில் கால்சியம் அதிகமாக உள்ளது. ஆனால், இறாலைச் சமைக்கும்போது, அதை அதிக நேரம் வேகவைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் அதில் உள்ள கால்சிய சத்து போய்விடும்.

* மீன் வகைகளில் மத்தி மீனிலும் கால்சிய சத்து நிறைந்திருக்கிறது. எனவே மத்தி மீனை வாரம் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

* பச்சை இலைக் காய்கறிகளில் கால்சிய சத்து அதிகம். அந்த வகையில், பசலைக் கீரை மற்றும் புராக்கோலி போன்ற உணவுகளை சாப்பிட்டு வந்தால், நமது உடம்புக்குத் தேவையான கால்சிய சத்து கிடைக்கும்.

* கொட்டைப்பருப்பு வகைகளில் ஒன்றான பாதாமில், வைட்டமின், கால்சிய சத்து நிறைந்திருக்கிறது. எனவே தினமும் பாதாம்பருப்புகளைச் சாப்பிட்டு நம் எலும்புகளை பலப்படுத்திக்கொள்ளலாம்.



Post a Comment

Protected by WP Anti Spam