களுத்துறையில் படகு கவிழ்ந்து பயங்கர விபத்து:10 பேர் பலி:பலரை காணவில்லை..!! (வீடியோ)

Read Time:3 Minute, 11 Second

16809864_1473577206026205_270117101_nகளுத்துறை கட்டுகுறுந்த கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் சிக்கிய 36 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.அதில் 26 பேர் பேருவளை மருத்துவமனையிலும் மேலும் 6 பேர் களுத்துறை நாகொட மருத்துவனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

களுத்துறை கட்டுகுறுந்த கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.இதேவேளை, காணாமல் போனவர்களை தேடுவதற்காக 3 டோரா படகுகளும், ஹெலிகொப்டர் ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்துள்ளவர்களில் 12 வயதான பிள்ளையொன்றும் உள்ள நிலையில், மேலும் கடலில் மூழ்கிய 19 பேர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை கட்டுகுறுந்த கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகில் இருந்த 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு தற்போது களுத்துறை நாகொட மற்றும் பேருவளை மருத்துவனைகளின் பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

இன்று காலை பேருவளையில் இருந்து களுத்துறை – ஸ்ரீகுருச தேவாலயத்திற்கு சென்ற நபர்கள் பயணித்த படகே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளது.மேலும் கடலில் மூழ்கிய 19 பேர் தற்போது மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் மேலும் பலர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை தேடி விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.விபத்தில் காணாமல் போயுள்ளவர்களை தேடி தற்போது கடற்படை மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரிகள் தேடுதலை ஆரம்பித்துள்ளதாக அந்த இடத்திற்கு சென்றுள்ள கடற்றொழில் திணைக்களத்தின் களுத்துறை மாவட்ட உதவி இயக்குனர் நுவன் குணவர்தன தெரிவித்துள்ளார்.

களுத்துறைபயாகல கடற் பரப்பில் படகு ஒன்று விபத்துக்கு உள்ளாகியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர்கா ணாமல் போன நிலையில், தேடும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வேண்டுமா? இங்கு நடக்கும் கொடுமையைப் பாருங்கள்..!! (வீடியோ)
Next post ஓரினச்சேர்க்கையால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள்..!!