ரூ.10 கோடி அபராதம் செலுத்தாவிட்டால் சசிகலாவுக்கு மேலும் 13 மாதம் சிறை..!!

Read Time:3 Minute, 36 Second

201702211522203935_Sasikala-to-serve-13-more-months-in-jail-if-fine-is-not-paid_SECVPFவருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைத்து குற்றம்சாட்டப்பட்ட அவரது தோழி சசிகலா நடராஜன் மற்றும் சசிகலாவின் உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோரை குற்றவாளி என்று அறிவித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா முன்னர் தீர்ப்பளித்திருந்த 4 ஆண்டு சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் மீண்டும் உறுதிப்படுத்தியது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பதவியேற்ற சசிகலா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 15-ம் தேதி ஆஜராகி அங்கு சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவரது தண்டனை காலம் 4 ஆண்டுகளாக இருக்கும் நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு இதே வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தபோது, கைதாகி இதே பரப்பன அக்ரஹாரா சிறையில் முன்னர் அடைக்கப்பட்ட சசிகலா, ஜாமினில் விடுதலை ஆவதற்கு முன்னதாக 21 நாட்கள் சிறையில் இருந்தார்.

அதை ஒருமாத காலமாக கணக்கிட்டு கொண்டால், அவர் இன்னும் 3 ஆண்டுகள், 11 மாதங்கள் மட்டுமே சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்.

இந்நிலையில், சிறைக்குள் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் ஏதும் அளிக்கப்படவில்லை என கர்நாடக மாநில சிறைத்துறை சூப்பிரண்ட் கிருஷ்ண குமார் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாதுகாப்பு கருதி சசிகலா, இளவரசி ஆகியோர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒரே செல்லுக்குள் (சிறிய அறை) தங்கியுள்ளனர்.

பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் மற்ற கைதிகளைப் போல்தான் குற்றவாளிகள் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நடத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு சிறப்பு சலுகை ஏதும் அளிக்கப்படவில்லை. பாதுகாப்பு கருதி சசிகலா, இளவரசி ஆகியோர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒரே செல்லுக்குள் (சிறிய அறை) தங்கியுள்ளனர்.

அவர்களுக்கு சிறையில் தயாரிக்கப்படும் உணவு வழங்கப்படுகிறது, டாக்டர்கள் அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகளை நடத்துகின்றனர். தேவையான மருந்துகள் அளிக்கப்படுகிறது. பொது இடத்தில், இதர கைதிகளுடன் சேர்ந்து டி.வி. பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, சசிகலா 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது. அபராதம் செலுத்த தவறினால், மேலும் 13 மாதம் அவர் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பளுதூக்கும் போட்டியில் இந்தியா சார்பில் விளையாட உள்ள நடிகை ரம்யா..!!
Next post பல்கலை மாணவர்களை நிர்வாணப்படுத்தியும் அடித்தும் கொடூர தாக்குதல்..!!