கூந்தல் உதிர்வை தடுத்து முடி வளர உதவும் அற்புத குறிப்புகள்..!!

Read Time:2 Minute, 24 Second

201702211202141197_homemade-hair-care-for-hair-grow_SECVPFமுடி அடர்த்தியாக வளர எல்லாருக்குமே ஆசை இருக்கும். இதற்கு மிக முக்கிய தேவை உண்ணும் உணவு மற்றும் வெளிப்புறம் தரும் போஷாக்கு. கூந்தல் போஷாக்கை பெற நம்முடைய பாரம்பரிய மூலிகைகள் இன்றியமையாததாக இருக்கின்றன. அவற்றின் மூலம் எப்படி பலன் பெறலாம் என பார்க்கலாம்.

* கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

* கடுக்காய், செவ்வரத்தம் பூ(செம்பருத்தி பூ), நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி கூந்தலில் தடவினால் கூந்தல் உதிர்வது நின்று நன்றாக வளரும்.

* ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும், அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும்.

* இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவைக் குழைத்துக் கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை மறைந்து முடி உதிர்தல் நிற்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் குடும்பத்துக்கு உதவ முன்வந்த ராகவா லாரன்ஸ்..!!
Next post சுய இன்பம் செய்யும் பக்க விளைவுகள்..!!