துணி துவைக்கும் இயந்திரத்தில் சிக்கி 3 வயது இரட்டை குழந்தைகள் உயிரிழப்பு..!!

Read Time:2 Minute, 31 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)இந்திய தலைநகர் டெல்லியில் துணி துவைக்கும் இயந்திரத்தில் இருந்த தண்ணீருக்குள் 3 வயது இரண்டு குழந்தைகளும் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ரோகிணி பகுதியை சேர்ந்தவர் ரவீந்தர். காப்பீட்டு நிறுவன ஊழியரான இவருக்கு 3 வயதில் நாக்‌ஷ், நீஷு என்ற இரட்டை ஆண் குழந்தைகள் இருந்தனர்.

நேற்று ரவீந்தர் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் இருந்த அவரது மனைவி ரேகா பகல் 12.30 மணி அளவில் துணிகளை துவைப்பதற்காக வாஷிங் மெஷினில் தண்ணீரை நிரப்பியுள்ளார்.

பின்னர் மெஷினில் போடுவதற்கு சோப்பு தூளை தேடியபோது அது காலியாகிவிட்டது தெரிந்தது. உடனே அவர் குழந்தைகளை வீட்டில் விட்டு, விட்டு சோப்பு தூள் வாங்க அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

சிறிது நேரத்தில் வீடு திரும்பிய அவர் குழந்தைகளை காணாமல் திடுக்கிட்டார். உடனே இதுபற்றி தனது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அவரும் உடனடியாக வீட்டுக்கு விரைந்துவந்து குழந்தைகளை தேடியுள்ளதாக கூறப்படுகிரது. அப்போது வாஷிங் மெஷினில் இருந்த தண்ணீருக்குள் இரண்டு குழந்தைகளும் மூழ்கி இருந்தன.

இந்நிலையில் குழந்தைகளை வெளியில் எடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே 2 குழந்தைகளும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குவித்து வைக்கப்பட்டு இருந்த அழுக்கு துணிகள் மீது குழந்தைகள் ஏறி வாஷிங் மெஷினுக்குள் இறங்கியதாக தெரிய வந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 112 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட ஆதிசிவன் சிலை!! இப்படித்தான் இருக்கிறார்..!! (வீடியோ)
Next post வெட்டி பந்தாவால் கொடூரமாக கொல்லப்பட்ட நடிகை..!!