உருளைக்கிழங்கை எந்த முறையில் சாப்பிட வேண்டும்..!!

Read Time:2 Minute, 11 Second

201702270406000683_Kuala-Lumpur-airport-declared-safe-after-Kim-Jongnam-nerve_SECVPFபொதுவாக, உருளைக்கிழங்கு பலருக்கும் விருப்பமான உணவாகவே இருக்கிறது. அதை பொரித்து, வறுத்து, அவித்து விதவிதமாய் சாப்பிட்டு மகிழ்கிறார்கள்.

ஆனால், எல்லோரும் இஷ்டப்படி உருளைக்கிழங்கைச் சாப்பிடுவது நல்லதல்ல என்கிறார் உணவியல் நிபுணர்கள்.

உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளரும் குழந்தைகள், கடின உடல் உழைப்பாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் உருளைக் கிழங்கை நிறையச் சேர்த்துக்கொள்ளலாம்.

ஆனால், சர்க்கரை நோயாளிகள், அதிக எடை உள்ளவர்கள் கண்டிப்பாக உருளைக்கிழங்கைத் தவிர்க்க வேண்டும். வாயுப் பிரச்சினை, வாத நோய் மற்றும் மூலநோய் பிரச்சினை உள்ளவர்கள் கிழங்கு வகைகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்களும் உருளைக்கிழங்கை சாப்பிடக் கூடாது.

பொதுவாக, கிழங்கு வகைகளை எப்படிச் சாப்பிடலாம்?

வேகவைத்துச் சாப்பிடுவதுதான் நல்லது. ஆனால் பலரும் ருசிக்காக, எண்ணெயில் வறுத்து, பொரித்துச் சாப்பிடுகின்றனர். எண்ணெயில் உள்ள கொழுப்பும் சேர்ந்து உடலுக்குப் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். மேலும், கிழங்கில் உள்ள சத்துகள் உடலில் சேராமல் போகும்.

கருணைக்கிழங்கு தவிர மற்ற கிழங்குகள் அனைத்தும் வாயுப் பிரச்சினையையும் வாத நோய் அபாயத்தையும் ஏற்படுத்தக்கூடியவை என்பதால் கிழங்குகளை அளவோடு சேர்த்துக்கொள்வதே நலம் பயக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ளக்காதலுக்கு இடையூறு! தாய் மற்றும் மனைவியை கூலிப்படை வைத்து கொன்ற மனித மிருகம்..!!
Next post மனிதனை விட புத்திசாலியான தூக்கணாம் குருவிகள் அரிதான காணொளி..!!