மெரீனாவில் போராட்ட அறிகுறி: 1500 போலீஸார் குவிப்பு..!!

Read Time:2 Minute, 57 Second

erterrerசென்னை மெரீனா கடற்கரையில் தடையை மீறி போராட்டம் நடக்க உள்ளதாக வெளியான தகவலையடுத்துஇ சுமார் 1500 பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துஇ கடந்த சில நாள்களாக போராட்டம் நடைபெற்றுவருகிறது.

இந்தப் போராட்டத்தை சென்னை மெரீனா கடற்கரையில் மாணவர்களும் இளைஞர்களும் நடத்தப்போவதாக பொலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து கடற்கரையின் கலங்கரை விளக்கம் தொடங்கி நேப்பியர் பாலம் வரை வழக்கமான 500 பொலிஸாருடன் கூடுதலாக ஆயிரம் பொலிஸார் நிறுத்தப்பட்டனர்.

மாறுவேடத்தில் பொலிஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அதேபோல்இ பொலிஸ் அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
10 மாணவர்கள் கைது: இதற்கிடையே திருவள்ளுவர் சிலை அருகே திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 மாணவர்களை பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தைத் தொடர்ந்து…: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் கோரி மெரீனாவில் ஜனவரியில் ஒரு வாரம் நடைபெற்ற போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இதனால் அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டுஇ ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இருப்பினும் போராட்டத்தின் கடைசி நாளன்று ஒரு தரப்பினர் வெளியேற மறுத்துஇ ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடபோவதாகத் தெரிவித்தனர்.

இதனால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதலும்இ வன்முறையும் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் போராட்டம்இ நிகழ்ச்சிகள் நடத்த பொலிஸார் தடை விதித்தனர்.

மேலும் அங்கு சுமார் 500 போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இந்த நிலையில்இ மீண்டும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக வெளியான தகவல் மெரீனாவில் அசாதாரண நிலையை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இயக்குனர் விஜய்க்கு இரண்டாம் திருமணம் :கதறி அழுத அமலாபால்..!!
Next post சந்தானம் பாடியிருக்கும் ‘ப்ரோ’ பாடல் – ரசிகர்களிடையே அமோக வரவேற்பு..!!