கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூர சம்பவம்- வீடியோ எடுத்த தோழி..!!
சிங்கப்பூரில் ஷொப்பிங் மாலின் 4வது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரிழந்தவரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள ஒரு பிரபல ஷொப்பிங் மாலின் சிசிடிவி கமெராவில் பதிவான வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
அதில், Jonathan Chow (17) என்ற இளைஞர் தன் தோழி Ruthஉடன் ஷொபிங் மாலின் 4வது மாடியில் சுவர் அருகில் நின்று பேசி கொண்டிருக்கிறார்.
அப்போது Jonathan அருகிலிருக்கும் சுவற்றை தாண்டி குதிப்பது போலவும், Ruth கத்துவது போலவும் வீடியோவில் உள்ளது.
கீழே விழுந்த Jonathan படுகாயங்கள் அடைந்து இறந்துவிட்டார். இந்நிலையில் இது குறித்து சோகத்துடன் கூறிய Jonathan தோழி Ruth, சுவர் அருகில் கான்கீரிட்டால் தளம் செய்யப்பட்டுள்ளது என இருவரும் நினைத்தோம்.
தளத்தில் Jonathan குதிப்பதாகவும் அதை என்னை வீடியோ எடுக்கும் படியும் என்னிடம் அவர் கூறினார்.
ஆனால் அவர் குதித்தவுடன் வேகமாக கீழ் தளத்துக்கு சென்று விழுந்து உயிரிழந்து விட்டார் என Ruth கூறியுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating